herzindagi
prevent termites

கரையான் தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இந்த 3 முக்கிய விஷயங்களை பின்பற்றுங்க...

வீட்டில் கரையான் தொல்லை ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-08-20, 13:03 IST

லட்சக்கணக்கில் செலவு செய்து மனதிற்கு பிடித்த மாதிரி வீடு கட்டி குடியேறினால் அத்துடன் வேலைகள் முடிந்ததாக அர்த்தமில்லை. பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்தால் மட்டுமே வீட்டின் ஆயுள் நீடிக்கும். வீட்டிற்குள் எறும்பு, எலி, கட்டெறும்பு, அரணை, புழுக்கள் ஆகியவற்றால் நமக்கு பிரச்னை ஏற்படும். அதிலும் குறிப்பாக கரையான் சுவர், மரப் பொருட்களை அரித்துவிடும். கறையன் தொல்லை பல வீடுகளில் உள்ளது. முத்திய பிறகே அதன் பிரச்னை வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரிய வருகிறது. ஆரம்பத்திலேயே பிரச்னையை கண்டறிந்து அதை சரி நல்லது. வீட்டிற்குள் கரையான் வராமல் தடுக்க மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் உள்ளன.

1) அடித்தளம் அமைத்தல் 

2) வீட்டை சுற்றி 

3) வீட்டிற்குள் சுவரை துளையிட்டு

ways to control termite at home

வீட்டின் அடித்தளம் அமைக்கும் போதே கரையான் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எளிமையான வழி. அந்த காலத்தில் வீடு கட்டும் அனைவருமே இதே செய்வார்கள். இப்போது வீடு கட்டும் சிலருக்கு இது தெரிவதில்லை. கரையான் பிரச்னை வராமல் தடுக்க மிகவும் பயனுள்ள வழியை பார்ப்போம். இதை அடித்தளம் அமைக்கும் போது செய்ய வேண்டும்.

  • அடித்தளம் அமைத்து மணல் நிரப்பிய பிறகு கான்கிரீட் போடுவார்கள். கான்கிரீட் போடும் முன்பாக ஆங்காங்கே ஒரு அடிக்கு சிறு சிறு பள்ளம் தோண்டி அதில் கரையான் வராமல் தடுக்க ரசாயம் ஊற்ற போகிறோம்.
  • எந்த பிராண்ட் ரசாயனம் வாங்கினாலும் சரி ஒரு லிட்டர் ரசாயனத்தில் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் கலந்து தோண்டிய பள்ளங்களுக்குள் ஊற்றவும். கான்கிரீட் போடும் முன்பாக இதைச் செய்வது நல்லது.
  • அடித்தளம் போட்டு சுவர் எழுப்பி வீடு கட்டும் வரை இதை செய்யத் தவறினால் கரையான் தடுப்பிற்கு மற்றொரு வழி உள்ளது.
  • வீட்டின் சுவற்றையொட்டி நான்கு பக்கமும் ஒரு அடிக்கு பள்ளம் தோண்டி அதில் இதே அளவிற்கு ரசாயனம் ஊற்றி மண் போட்டு மூடிவிடுங்கள்.
  • முதல் இரண்டு வழிகளை தவறவிட்டால் மூன்றாவதாக வழி உள்ளது. பொதுவாக கரையான் கதவு, ஜன்னல், மரப் பொருட்களில் தோன்ற ஆரம்பிக்கும். இதை கவனமுடன் கையாள வேண்டும்.
  • கதவு, ஜன்னல், மரப் பொருட்களில் தோன்றும் கறையான ஒழிக்க கரையான் ஸ்ப்ரே வாங்கி அடித்து அதன் பிறகு பாலிஷ் செய்யவும். இப்போது மரப் பொருட்கள் அரிக்காது.
  • வீட்டிற்குள் கரையான் வந்துவிட்டால் நம்மால் ஏதும் செய்ய முடியாது. ஆட்களை அழைத்து தீர்வு காண வேண்டும்.
  • அவர்கள் சுவற்றில் டைல்ஸ் ஒட்டிய பகுதிகள், கதவின் ஓரங்களில் துளையிட்டு அதில் ஊசிய வழியாக கரையான் தடுப்பு ரசாயனத்தை ஊற்றுவார்கள். பிறகு வெள்ளை சிமெண்ட் போட்டு மூடிவிடலாம்.
  • ஈரத்தினால் சுவற்றில் பூஞ்சை தொற்று உருவானால் அதற்கென பிரத்யேக பெயிண்ட் உள்ளது.

வீட்டில் கரையான் பிரச்னை ஏற்படாமல் தடுக்க இந்த மூன்று வழிகளை பின்பற்றவும். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com