herzindagi
image

ஆன்மிக வழிபாட்டுக்கு ஏற்ற மார்கழி மாத்தில் போடப்படும் அழகிய கோயில் வடிவ கோலங்கள்

பல சிக்கலான புள்ளிகளை வைத்துப் போடப்படும் ஆன்மீக கோலங்கள் பொதுவாக மார்கழி மாதத்தில் போடப்படுகிறது. அப்படி போடப்பட்டு வாசலை அழகு சேர்க்கும் கோபுர வடிவ கோலங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்
Editorial
Updated:- 2024-12-20, 23:21 IST

மார்கழி மாதம் என்றாலே ஆன்மிக வழிபாட்டுக்கு ஏற்ற நாட்களாகவே இருந்து வருகிறது. மார்கழி மாத பனியில் இடும் கோலங்கள் வீட்டை மேலும் அழகு சேர்க்கிறது. மார்கழி மாத கோலத்திற்காகவே பெண்கள் அதிகாலையில் எழுந்து பல விதமான வண்ணங்களை வைத்து கோலம் வரைவார்கள். மயில் கோலம், குயில் கோலம், தாமரை கோலம், விளக்கு கோலம், ரங்கோலி மற்றும் கம்பி கோலங்கள் என பல வகைகளில் போடப்படுகிறது. இதில் ஆன்மிகத்தை வெளிப்படுத்தும் விதமாகக் கோயில்களில் இருக்கும் சிற்பங்கள், கோபுரங்கள், மற்றும் தெய்வங்கள் என பல விதமாக அறியப்படுகிறது. அதுபோல் மார்கழி மாதத்தில் போடப்படும் கோலங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: மார்கழி மாதம் கோலத்தை மேலும் அழகு சேர்க்கும் பார்டர் கோலங்களின் லேட்டஸ்ட் டிசைன்கள்

கோயில் கோபுர கோலம்

 

வலது, இடது என இரண்டு பக்கத்திலும் 6 புள்ளிகள் வைத்து தொடங்கப்படும் இந்த கோலம், இறுதியில் 7 புள்ளிகளைக் கொண்டு முடிவடைகிறது. இது கம்பி கோலத்தை மையமாகக் கொண்டு வரையப்படுகிறது. கோபுர வலதும், இடது பக்கத்தில் குத்து விளக்கு கோலம் வரைந்து மேலும் அழகு சேர்க்கிறது. இந்த கோலம் கண்டிப்பாக ஆன்மிக பக்தியை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வரும். கோபுரம் மேல் புரத்தில் பெருமாள் வழிப்பாட்டிற்கு ஏற்ற நாமம், சங்கு மற்றும் சக்கரம் கோலம் முழுமை சேர்க்கிறது.

temple kolam

Image Credit: pinterest


தேர் கோலம்

 

தெய்வ வழிப்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற தேர் ஊர்வலம் மிக சிறப்பு மிக்கதாக இருக்கும். இந்த தேர் கோலமானது 15 புள்ளிகளில் தொடங்கி ஒரு புள்ளியில் நிறைவடைகிறது. இந்த தேர் கோலமானது பிரமாண்டமான வடிவமைப்பில் வரையப்படும் கோலமாகும். வீட்டிற்கு தெய்வ வழிப்பாட்டைக் கொண்டு வருவதில் இது முழுமை சேர்க்கிறது. தேர் கோலத்தின் மேல் மற்றும் கீழ் பக்கத்தில் குத்து விளக்கு கோலம் போடப்பட்டு அழகை சேர்க்கிறது. அதன்பிறகு மையப்பகுதியில் 7 புள்ளிகளில் தொடங்கி ஒரு புள்ளியில் முடியும் கம்பி கோலத்தைக் கொண்டு நிறைவு செய்யலாம்.

temple kolam 1

Image Credit: pinterest


விநாயகர் கோலம்

 

முழு முதல் கடவுளான விநாயகரை வழிப்பாட்டு தொடங்கும் நல்ல காரியம் கைகூடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி வழிப்படும் கடவுளின் கோலம் வாசலில் வரையப்பட்டால் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியதாக இருக்கும். இந்த கோலமானது சிக்கு கோலத்தை குறிக்கும் விதமாக வரையப்பட்டு இருக்கும். புள்ளிகள் இல்லாமல் ரங்கோலி கோலத்தைத் தழுவுவது போல இந்த கோலத்தை தொடங்க வேண்டும்.

temple kolam 2

Image Credit: pinterest

துளசி மாடம் கோலம்

 

தெய்வ வழிப்பாட்டில் மிக முக்கியதும் பெற்றது இந்த துளசி மாடம், கோலமாக வீட்டு வாசலில் வரையும் போது தெய்வ கடாட்சத்தை உணரச் செய்கிறது. இந்த கோலத்தைப் பல வண்ணங்களை இட்டு அழகை மேம்படுத்தலாம்.

 துளசி மடம் கோலம்

Image Credit: pinterest


ராமர் கோலம்

 

ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமன் இருக்கும் அழகிய தெய்வ வடிவ கோலம். இந்த கோலம் மார்கழி மாதத்திற்கு ஏற்ற தெய்வீக கோலமாக இருக்கும். இது ஒரு அழகிய சிக்கு கோலம். வாசலில் வரைவதை விட, பூஜை அறையில் வரைவது இந்த கோலத்திற்கு மேலும் அழகை கூட்டும்.

temple kolam 5

 Image Credit: pinterest


மேலும் படிக்க: மார்கழி மாதம் வீட்டு வாசலில் கம்பி கோலம் போடுவதின் முக்கியத்துவம்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com