ஆன்மீக ரீதியாக மார்கழி மாதத்தில் கோலம் போடுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தைத் தருகிறது. மார்கழி மாதம் கொட்டும் பனியில் கோலம் போடுவது மருத்துவ ரீதியாக உடலுக்கு நல்லது. அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மார்கழி மாத்தில் ஆண்கள் அதிகாலையில் குளித்துவிட்டு வீதி வீதியாகப் பஜனைகள் பாடுவார்கள், இவை அனைத்தும் மனத்திற்கும், உடலுக்கும் பல நன்மைகளைத் தரக்கூடியது. மார்கழி மாதம் கோலம் என்று சொன்னால் தெய்வ வழிப்பாட்டிற்கு ஒரு வழியாகக் கூறலாம். தெருக்கள் முழுவதும் கோலங்களால் வீடுகள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். கோலங்கள் வீட்டை அழகுபடுத்தினால் அந்த கோலத்தை அழகு சேர்ப்பது இரு பக்கங்களும் போடப்படும் பார்டர் கோலங்கள். குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் விதவிதமாக போடுவார்கள். இது போன்ற பார்டர் கோளங்களில் லேட்டஸ்ட் டிசைன்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க: மார்கழி மாதம் வீட்டு வாசலில் கம்பி கோலம் போடுவதின் முக்கியத்துவம்
மார்கழி மாதம் கோலம் அழகு என்றால் அதை அழகு சேர்க்கும் விதமாகப் போடப்படும் பார்டர் கோலங்கள் ஒரு தனி அழகை சேர்க்கும். பார்டர் கோலங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
இந்த பார்டர் கோலம் வரைந்தால் வீட்டிற்கு வெளிச்சத்தை தரக்கூடியதாக உணரச் செய்யும். நீங்கள் போடும் பெரிய கோலத்தின் வடிவத்தை வைத்து இரண்டு பக்கத்திலும் ஆங்கில வார்த்தையான “எஸ்” வடிவத்தை வரையவும். எஸ் வடிவத்தின் இரு முனையிலும் விளக்கு வடிவத்தை வரைய வேண்டும். இந்த எஸ் வடிவத்தின் மையப்பகுதியில் சிறு பூக்கள் வரைந்தால் மேலும் கோலத்திற்கு அழகு கூடும். தீப ஒலிப்பக்கத்திலும் ஒரு பூ வடிவத்தைப் போட்டு பார்டர் கோலத்தை நிறைவு செய்யலாம்.
Image Credit: pinterest
இந்த நட்சத்திர வடிவ பார்டர் கோலம் வீட்டிற்கு மங்களகரமான தோற்றத்தைத் தரக்கூடியது. இந்த பார்டர் கோலத்திற்கு மையப்பகுதியில் நட்சத்திரம் வரைய வேண்டும். பின் நட்சத்திரம் நேர் எதிராக இரண்டு கோடுகள் போட்டு, கோடுகளின் இரண்டு பக்கத்திலும் உங்களுக்கு பிடித்த வண்ணங்கள் கொண்டு புள்ளிகள் வைக்கவும். கோடுகளை ஒட்டி ஒரு சிறிய வளைவு, அதே கோடுகளை ஒட்டி எஸ் வடிவத்தில் பெரிய வளைவை இட்டு, அதன் மேல் சிறு பூக்கள் வரைந்து நிறைவு செய்தால் பார்க்கும் கண்களுக்கு விருந்தாகத் தோன்றும்.
Image Credit: pinterest
இந்த கோலம் எளிமையானது பார்க்க அழகானது. அரை வட்டத்தை ஒன்று சேர்க்கும் விதமாக கம்பி வடிவ கோலத்தை வைத்துக்கொள்ளுங்கள். கம்பி வடிவ கோலத்தின் இரு முனையிலும் ஒரு சிறு வளைவை வரைந்து, அதை ஒட்டி பெரிய வளைவை வரைந்து வண்ண புள்ளிகள் வைத்து முடிக்கவும்.
Image Credit: pinterest
இந்த மயில் பார்டர் கோலம் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வகையில் இருக்கும். இந்த கோலத்திற்கு இரண்டு பெரிய கோடுகள் வரைந்து, முதல் கோட்டில் அரை வட்டத்தை வரைந்துகொள்ளவும். அந்த வட்டத்தை ஒட்டியது போல் இரண்டு மயில்களை வரைந்துகொள்ளவும். இரு மயில்களுக்கு நடுவில் தாமரை வடிவத்தையும், கீழ் பக்கம் பூ வடிவத்தையும் போடவும். அதே போல் கோடுகளுக்கு முனையில் பூக்களை வரைந்து முடிக்கலாம்.
Image Credit: pinterest
இந்த கோலத்திற்கு ஒரு அழகிய பூவை வரைந்து, பூவின் இரு பக்கத்தில் இரு வளைவுகளை வரைந்துகொள்ளவும். பெரிய வளைவை மயிலாக அமைத்துக்கொள்ளவும். மயிலுக்கும் வளைவுக்கும் மையப்பகுதியைச் சிறிய பூக்கள் வரைந்து பார்டர் கோலத்தை நிறைவு செய்யவும்.
Image Credit: pinterest
மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திற்கு வீட்டு வாசலை அழகுபடுத்த விளக்கு கோலங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com