மறதி என்பது பொதுவான விஷயம் தான். அதே சமயம் நம்மை சுற்றியுள்ளவர்களைக்கூட மறக்கும் போது தான் அது நோயாக உருமாறுகிறது. அதுவும் வயதானக் காலத்தில் நம்மை மட்டுமில்லை, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிரமப்படுத்தக்கூடிய நோய் தான் அல்சைமர் அல்லது டிமென்சியா எனப்படும் மறதி நோய். வயதாக வயதாக நம்முடைய மூளைக்குச் செல்லக்கூடிய செல்களைச் சிதைப்பதோடு ஞாபக சக்தியையும் இழக்க செய்கிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் முற்றிலும் மறந்துவிடுகின்றனர். தனிமையில் உட்கார்ந்து தனக்குத் தானே புலம்பிக் கொள்வார்கள். இந்த பாதிப்பு அளவுக்கு சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பொதுவாக இந்த பாதிப்பு என்பது ஆண்களை விட பெண்களைத் தான் அதிகளவில் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கான காரணம் என்ன? என்பதை கட்டாயம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். இதோ முழு விபரம் இங்கே..
மேலும் படிங்க:இலவங்கப்பட்டை டீயில் உள்ள அற்புத குணங்கள் இது தான்!.
பெண்களை அதிகம் பாதிக்கும் மறதி நோய்:
- அல்சைமர் எனப்படும் மறதி நோய் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று பரம்பரையாகவும், மற்றொன்று குடும்பம் சாராமல் வரக்கூடியது. குறிப்பாக ஹார்மோன் மாற்றங்கள், உயர் இரத்த அழுத்தத்தின் விளைவுகளில் உள்ள வேறுபாடுகள் மற்றும் உடல் செயல்பாடுகளின் மாறுதல்கள், வாழ்க்கை மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களால் மறதி நோய் ஏற்படுகிறது.
- ஆண்களை விட பெண்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் இரு மடங்கு அதிகளவில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான காரணங்கள் தான். ஆனாலும் வயதான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு மாதவிடாய்.
- நடுத்தர வயதின் பிற்பகுதியில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற பாலியல் ஹார்மோன்களின் மாற்றம், மூளையின் ஆரோக்கியத்தில் பலவிதமானப் பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது. ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதாலும் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.
- குழந்தைப் பிறப்பிற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த எடை அதிகரிப்பும் மறதி நோய்க்கு ஒரு காரணமாக அமைகிறது.
- உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாகும் போது மறதி நோய் ஏற்படுகிறது.

பாதிப்புகள் என்ன?
- நமக்கு ஏற்படும் மற்ற உடல் நலப்பிரச்சனைகளை விட பெரும் பாதிப்பை நமக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்படுத்தக்கூடியது இந்த மறதி நோய் பாதிபபு தான்.
- குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமப்படுவது முதல் தாம் யார் என்பதை மறந்துவிடுவார்கள்.
- காலையில் எழுந்து பல் துலக்குதல் முதல் எந்தவொரு தினசரி பழக்கங்களைச் செய்வதற்குக்கூட சிரமத்தைச் சந்திப்பார்கள்.
- திரும்ப திரும்ப ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டே இருப்பது முதல் தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் போன்ற பாதிப்பை சந்திக்க நேரிடும்.
பாதிப்பைத் தடுக்க செய்ய வேண்டியது?
- பிற நோய்களைப் போன்று மருந்து, மாத்திரைகளால் இவற்றைக் குணப்படுத்த முடியாது. மாறாக வயதானவர்களுக்கு அவர்களது வாழ்க்கை நடைமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
- இளம் வயதில் அவர்களுக்கு என்ன பிடிக்குமோ? அந்த விஷயங்களை மறக்காமல் பழக்கப்படுத்த வேண்டும்.
- வயதானர்கள் எப்போதும் குழந்தைகள் போலத் தான் என்பதால், பல் துலக்குவது முதல் குளிப்பது எப்படி? என அவர்கள் மறந்திருந்தால் கற்றுக்கொடுக்க வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்கள் வேறு ஊர்களில் இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது வீடியோ காலில் அவர்களைப் பேச வைக்க வேண்டும்.
- வயதானவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்குத் தடையாக இருக்கக்கூடாது.
- அதிக மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும். இதுவும் அல்சைமர் பாதிப்புக்கு ஒரு காரணமாக அமையும்.
- அடிக்கடி தலையில் அடிபடுவது, காயங்கள், அதீத கோபம் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளவும்.
- குறிப்பாக பெண்களுக்கு அவர்களுக்குத் தெரிந்த கைவினைப் பொருள்களை மேற்கொள்ள சொல்லவும்.

இதுப்போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். இனி நீீங்களும் இதை மறக்காமல் உங்களது வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation