Benefits of Cinnamon Tea: இலவங்கப்பட்டை டீயில் உள்ள அற்புத குணங்கள் இது தான்!

உணவிற்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமின்றி பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு உதவியாக உள்ளது இலவங்கப்பட்டை.

benefits of cinnamon

நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இதனால் தான் நம் முன்னோர்கள் பல சமையல் பொருள்களை அதிகமாக நாம் உபயோகிக்கும் படி நம்மைப் பழக்கப்படுத்தியுள்ளனர். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, வெந்தயம், வெங்காயம் என உடலுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய சமையல் பொருள்களின் லிஸ்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதோ அவற்றில் ஒன்றான இலவங்கப்பட்டை மற்றும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் இலவங்கப்பட்டை டீயின் அற்புத குணங்கள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

cinnamon tea for women health benefits

இலவங்கப்பட்டை:

உணவிற்கு சுவையைக் கொடுப்பதோடு மட்டுமின்றி பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு உதவியாக உள்ளது இலவங்கப்பட்டை. இதில் மெக்னீசியம், இரும்பு, புரதம், கால்சியம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவற்றை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்குகிறது. அதிலும் காலையில் வழக்கமான டீக்குப் பதிலாக இலவங்கப்பட்டை டீ யை குடிப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இலவங்கப்பட்டை டீ தயாரிக்கும் முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
  • பின்னர் அதில் சிறிதளவு இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சியைத் தட்டி சேர்த்துக் கொள்ளவும.
  • இவை அனைத்தும் நன்றாக கொதித்து வந்ததும் சிறிதளவு கிரீன் டீ சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
  • பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டிக்கொள்ளவும். உங்களது சுவைக்காக இதனுள் தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் நீங்கள் பருகலாம்.

இலவங்கப்பட்டை டீயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

  • நீங்கள் தினமும் காலை நேரத்தில் இலவங்கப்பட்டை டீயைக் குடிக்கும் போது, உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளைக் கரைக்கவும் உதவியாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் எவ்வித அச்சமும் இன்றி இலவங்கப்பட்டை டீயை உங்களது டயட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் பருவகால தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இலவங்கப்பட்டை டீ சிறந்த தேர்வாக அமையும்.
drinking women cinnamon Tea
  • உடல் எடையைக்குறைப்பதற்கு மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் இலவங்கப்பட்டை உங்களுக்கு உதவியாக உள்ளது.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைப் போக்கும் நிவாரணியாகவும் இலவங்கப்பட்டை உள்ளது. இந்த நாள்களில் நீங்கள் காலை வேளைகளில் இலவங்கப்பட்டை டீயைக் குடிப்பதால் மாதவிடாய் கால வலி, சோர்வு, குமட்டல் போன்றவற்றைக்குறைக்கிறது.
  • இலவங்கப்பட்டையில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், சருமப்பொலிவு மற்றும் முகப்பரு பிரச்சனைகளைப் போக்குவதற்கு உதவியாக உள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP