இரவு ஏழு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் மிகவும் நல்லது!

இரவு ஏழு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணங்களை விரிவாக பார்க்கலாம்.

Main pm

தினமும் இரவு ஏழு மணிக்குள் இரவு உணவு சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். ஏழு மணிக்குள் சாப்பிடுவதால் உணவு செரிமானம், இரவு நேர தூக்கம், எடை மேலாண்மை ஆகியவற்றில் சிக்கல் ஏதுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

உடல் எடையை நிர்வகிப்பதற்கும், நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கும் இரவு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன என மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணரும் ஷிகா சிங் தெரிவித்துள்ளார்.

சிக்கலற்ற செரிமானம்

இரவு நெருங்க நெருங்க நம் உடலில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. நாம் இரவு ஏழு மணிக்குள் உணவை முடிப்பதன் மூலம் உறங்கும் முன்பாகவே செரிமான அமைப்புக்கு உணவு செரிமானத்திற்கு போதுமான நேரத்தை வழங்குகிறோம். இரவு உணவைத் தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது அது சரியாகச் செரிமானம் ஆகாமல் போக வாய்ப்புண்டு. செரிக்கப்படாத உணவு உடலில் கொழுப்பாக மாறிவிடும். இதனால் உடல் பருமனாகிறது.

எடை மேலாண்மை

 pm

நீங்கள் உடல்எடை மேலாண்மையில் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்தால் தாமதமாகச் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். இரவு உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் உறங்கச் சென்றால் உடல் திறம்பட கலோரிகளை எரிப்பதற்கு (Burning of Calories) வாய்ப்பு இருக்காது. இது காலப்போக்கில் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

மேலும் படிங்கதினமும் எட்டு கிராம் உப்பு உட்கொள்வது ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு

சிறந்த தூக்கம்

தினமும் உங்கள் உடல் ஓய்வெடுப்பதற்கு குறிப்பிட்ட நேரம் தேவை. நீங்கள் தாமதமாகச் சாப்பிடும் போது உணவு ஜீரணத்திற்கு உடல் அதிக கவனம் செலுத்தும். இதனால் உடல் ஓய்வெடுப்பதில் சிக்கல் ஏற்படும். இது தூக்கமின்மைக்கு விளைவித்து காலையில் உங்களைச் சோர்வாக்கிவிடும்.

ஹார்மோன் சமநிலை

தாமதமாகச் சாப்பிடுவது உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் பாதிக்கப்படுவதை நீங்கள் கவனமுடன் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிங்கசளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!

இரத்தத்தில் சர்க்கரை அளவுக் கட்டுப்பாடு

 pm

இரவில் தாமதமாக கார்போஹைட்ரேட்டுகள் உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். மாலிகுலர் டைவர்சிட்டி ப்ரிசர்வேஷன் இன்டர்நேஷனல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது, இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவதை விட ஆறு அல்லது ஏழு மணிக்குள் சாப்பிடுவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் சராசரியாக காட்டி இருக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP