herzindagi
Main cold

பாட்டி வைத்தியம் : இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி தண்ணீர்!

குளிர்கால நோய்களில் இருந்து விடுபடுவதற்கு பாட்டி வைத்தியமும் உங்களுக்கு உதவும். குறிப்பாக இஞ்சி தண்ணீர் மற்றும் மஞ்சள் நீர்!
Editorial
Updated:- 2023-12-12, 22:19 IST

மருந்தகங்களை தேடி அலையாமல் உங்கள் சமையலறையில் சிறிது தேடினால் போதும் அங்கேயே பருவகால ஒவ்வாமை மற்றும் குளிர்கால உடல்நலக் கோளாறுகளுக்குத் தீர்வு உள்ளது. கருப்பு மிளகு முதல் துளசி வரை பாட்டி வைத்தியத்தில் பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் சமையலறையில் இருக்கின்றன. இவை சளி மற்றும் இருமலிலிருந்து உங்களுக்கு நிவாரணம் தரும்.

சமையலறையில் உள்ள மிக முக்கியமான இரண்டு மருத்துவ குணங்கள் கொண்ட பொடருட்கள் - மஞ்சள், இஞ்சி. இவற்றை வைத்து எப்படி குளிர்கால உடல்நல கோளாறுகளுக்குத் தீர்வு காணலாம் என இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்.

இஞ்சி தண்ணீர்

 cold

இது செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற உதவும். இஞ்சி தண்ணீர் அருந்தினால் இருமல் குறையும். தேவைக்கு ஏற்ப இதைத் தயாரித்து நீங்கள் அருந்தலாம். ஆயுர்வேதத்தில் இஞ்சி தண்ணீரை சுந்தி சித்த ஜல் என்றழைக்கின்றனர்.

மேலும் படிங்க சளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!

தேவையான பொருட்கள்

  • ஒரு லிட்டர் தண்ணீர் 
  • அரை ஸ்பூன் இஞ்சி தூள்
  • ஒரு அங்குல இஞ்சி துண்டு 

செய்முறை 

  • பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர்  தண்ணீரை கொதிக்க வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் இஞ்சி துண்டு மற்றும் இஞ்சி தூள் சேர்க்கவும்.
  • கலவையை பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனால் இஞ்சியின் அனைத்து ஊட்டச்சத்து சாறுகளும் தண்ணீரில் கலக்கப்படும்.

பின்னர் இதனை வடிகட்டு ஒரு பாட்டிலில் சேமிக்கவும். இதை உட்கொள்வதற்கு முன் சற்று ஆற வைக்கவும். துருபிடிக்காத ஒரு பாத்திரத்தை இஞ்சித் தண்ணீரை சேமிப்பது நல்லது.

 மேலும் படிங்க குளிர்காலத்தில் உடல்நலன் காக்கும் நெல்லிக்காய், தேன்

இருமலுக்கு தீர்வளிக்கும் மஞ்சள் நீர்

 cold

தொடர்ச்சியான இருமலுக்கு மஞ்சள் நீரில் வாயைக் கொப்பளித்தால் போதுமானது. குழந்தைகளுக்கு இது பெரிதும் உதவும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு ஸ்பூன் மஞ்சள்
  • ஒரு டம்ளர் தண்ணீர்

செய்முறை 

  • முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  • 3-5 நிமிடங்களுக்கு மஞ்சள் தூள் தண்ணீரில் கரையும் வரை கிண்டவும்

பிறகு இதை ஆற வைத்து விடவும். மருத்துவ பண்புகள் கொண்ட மஞ்சள் நீரை பெரியவர்கள் தினமும் மூன்று முறை பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம். குழந்தைகள் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com