வாயு தொல்லை ஏற்படுவதற்கு பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகளே காரணமாகும். முள்ளங்கி சாப்பிட்டால் வாயு தொல்லையால் அவதிப்படுவோம் என அறிந்ததே. இதை சிரித்து கடந்துவிடாமல் முள்ளங்கி சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படுவது ஏன் ? முள்ளங்கியை எவ்வாறு சமைத்தால் வாயு தொல்லையை தவிர்க்கலாம் போன்ற விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த முள்ளங்கி அரை மணி நேரத்தில் ஜீரணம் ஆக வாய்ப்புண்டு. எனினும் அதில் உள்ள ராஃபினோஸ் சர்க்கரையை உடைத்து செரிமானம் ஆவதற்கு நேரமெடுக்கும்.
பிற காய்கறிகளை போல முள்ளங்கியிலும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும் என்பதை அறிவோம். ஆனால் அதை அதிகமாக உட்கொண்டால் வாயு மற்றும் வயிறு உப்புசம் உண்டாகும். ஒரு சிலருக்கு செரிமான அமைப்பில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படலாம்.
முள்ளங்கியில் ராஃபினோஸ் போன்ற சர்க்கரை இருக்கிறது. ராஃபினோஸ் நம்முடைய குடல் அமைப்பில் ஜீரணம் ஆவது மிகக் கடினம். குடல் அமைப்பில் உள்ள பாக்டீரியாக்கள் ராஃபினோஸ் சர்க்கரையை புளிக்க வைத்து வாயுவை உருவாக்கிடும். ஒரு சிலர் அதிகளவில் முள்ளங்கி சாப்பிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்படாது. இது நபருக்கு நபர் மாறுபடும். வேறு சிலர் கொஞ்சமாக சாப்பிட்டாலும் அசெளகரியமாக உணர்வார்கள்.
முள்ளங்கியை போல் மொச்சைக்காய் சாப்பிடுவதும் வாயு தொல்லையை உண்டாக்கும். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் கண்டிப்பாக வயிற்றில் வாயு உருவாவதை தடுக்க இயலாது.
மேலும் படிங்க வாயு அடைப்பால் பலூன் போல் மாறிய வயிற்றை சரி செய்வதற்கு பாட்டி வைத்தியம் பின்பற்றுங்க
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com