கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பகாலத்தில் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது பலரின் மனதில் உள்ள கேள்வி. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த காய்கறி கர்ப்பிணிகளுக்கு ஏற்றதா, மற்றும் அதன் நன்மைகள் என்ன பக்க விளைவுகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முருங்கைக்காயின் ஊட்டச்சத்து நன்மைகள்:
முருங்கைக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கர்ப்பிணிப் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையை தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. குறிப்பாக முருங்கை இலைகளில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகிறது.
மேலும், இது கர்ப்பிணி பெண்களுக்கு காலை நேர பலவீனத்தை குறைத்து ஆற்றலை அதிகரிக்கிறது. இதில் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால், கருவின் நரம்புக் குழாய்க் குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.
முருங்கைக்காயின் பக்க விளைவு:
முருங்கை சாப்பிடுவது நல்லது என்றாலும் அதில் ஒரு சில பக்க விளைவுகளும் இருக்கும். முருங்கை மரத்தின் பட்டை, பூக்கள் மற்றும் வேர்களில் உள்ள "ஆல்பா-சிட்டோஸ்டெரால்" என்ற வேதிப்பொருள் கருப்பை சுருக்கங்களைத் தூண்டி கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் முருங்கைக்காயைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் முருங்கைக்காய் சாப்பிடுவதால் வயிற்றுப் புளிப்பு, வயிற்றுப்போக்கு அல்லது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் இதை சாப்பிட விரும்பினால், முதலில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வராமல் தடுக்க; இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்
முருங்கைக்காயை பாதுகாப்பாக சாப்பிடுவது எப்படி?
- கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் முருங்கைக்காயைத் தவிர்ப்பது நல்லது.
- முருங்கைக்காய் சாப்பிடும்போது நன்கு கழுவி, சரியாக சமைக்க வேண்டும்.
- சுத்தமற்ற முருங்கைகாயில் பாக்டீரியா அல்லது பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருக்கலாம்.
- இதை சூப், கறி அல்லது பருப்பு வடைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- முருங்கை இலைகளை வேகவைத்து அல்லது சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு:
முருங்கைக்காய் சாப்பிட்ட பிறகு வயிற்று வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மிதமான அளவில் மட்டுமே இதை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தெளிவான புரிதலுக்காக ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். முழு கர்ப்பகாலத்திலும் முருங்கைக்காயைத் தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பான வழியாகும்.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation