இன்றைய வேகமான வாழ்க்கை முறை காரணமாக அதிகப்படியான மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தம் காரணமாக மனச்சோர்வு மற்றும் பதற்றமும் சேர்ந்து வருகிறது. இவை இரண்டும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் பொதுவான மனநல கோளாறாகும். இந்த கோளாறுகள் மனநிலை மற்றும் நடத்தை அறிகுறிகளின் வடிவத்தில் தோன்றும், ஆனால் ஒரு நபர் அதிக மனச்சோர்வுடைய தொடங்கினால், அவர் அடிக்கடி பதட்டம் அடைவார்கள், பின்னர் அவை அறிவாற்றல் திறன்களை பாதிக்கிறது. இது ஞாபக சக்தியையும், முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கிறது. கவலை மற்றும் மனச்சோர்வு உங்கள் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம். இது தொடர்பாகச் சுகாதார நிபுணர் திருமதி தீக்ஷா பார்த்தசார்த்தி- நரம்பியல் நிபுணர் இதை பற்றிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஞாபக மறிதை ஏற்படுத்தும்
இந்த இரண்டு கோளாறுகளும் மூளையில் உள்ள அத்தியாவசிய நரம்பியக்கடத்திகளின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது மற்றும் அமிக்டாலா, ஹிப்போகாம்பஸ் மற்றும் ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸ் போன்ற மூளை கட்டமைப்புகளைப் பாதிக்கிறது, இதன் விளைவாகத் துணை அறிவாற்றல் செயல்முறைகள் ஏற்படுகின்றன.
Image Credit: Freepik
கவனம் செலுத்துவதில் சிக்கல்
பதட்டம் ஒரு நபரை தொடர்ந்து பல வகையான எண்ணங்களால் நிரப்புகிறது, இது அவரது கவனம் செலுத்தும் திறனைக் குறைக்கிறது. ஒருவரால் ஒரு பொருளில் கவனம் செலுத்த முடியாமல் போனால், அவரால் அதை சரியாகப் புரிந்துகொள்ளவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ முடியாது. இதன் விளைவாக நீங்கள் குறுகிய கால நினைவாற்றல் இழப்புக்கு இரையாகிவிடுவீர்கள். இதனால் சின்ன சின்ன விஷயங்களை நினைவில் கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிரமப்படுவார்கள்.
விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல்
கவலையின் ஒரு பகுதி மன அழுத்தம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், இது உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. அதிக அளவு கார்டிசோல் நினைவகத்தைப் பாதிக்கிறது. இதன் பொருள் ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்களால் அறிந்தது அல்லது கற்றுக்கொண்டதை நினைவுபடுத்த முடியாது. இதனால்தான் தேர்வின் போது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்கள் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள்.
முடிவெடுப்பதில் சிரமம்
மனச்சோர்வு மூளையின் நினைவக மையமான ஹிப்போகாம்பஸை பாதிக்கிறது. இது ஹிப்போகாம்பஸின் செயல்பாட்டை பலவீனப்படுத்துவதால் தகவல்களை நினைவில் கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வது அல்லது அதைச் சரியாக நினைவில் வைத்திருப்பது கடினம். இது தவிர எதிர்மறை நிகழ்வுகளை அதிகம் நினைவில் கொள்கிறார்கள்.
மனச்சோர்வு டோபமைன் செயல்பாட்டில் குறைவை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக, ஒரு நபர் முடிவுகளை எடுப்பது கடினம். அவர்கள் எதிர்மறையான அனுபவங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், இது எதிர்கால முடிவுகளை எடுக்கும் திறனை பாதிக்கிறது.
Image Credit: Freepik
ஞாபக சக்தியை வலுப்படுத்த வழிகள்
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்
- யோகா மற்றும் தியானம் செய்யலாம்
- நியூரோபிளாஸ்டிசிட்டியை மேம்படுத்தும் நுட்பங்கள் போன்ற உத்திகளைப் பின்பற்றுவது விளைவுகளை குறைக்க உதவும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation