How To Detox Body : உடல் எடையை இயற்கையாக குறைக்க டீடாக்ஸ் செய்வது எப்படி?

உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை இந்த வழியில் வெளியேற்றி விட்டால், நீங்கள் நீண்ட நாட்களுக்கு கச்சிதமான உடலுடன் இருக்கலாம்…

Sanmathi Arun
detox your body permanently

டீடாக்ஸ் என்றால் உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை நீக்கி, உடலை சுத்தம் செய்யும் வழிமுறை. உடல் எடை குறைப்பின் போது, நம் உடலில் உள்ள கெட்ட கணிமங்களை வெளியேற்ற டீடாக்ஸ் முறையை எதிர்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான உடல் எடை குறைப்பு முறையாக இருந்தாலும், டீடாக்ஸ் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஒரு முறை நீங்கள் உடல் எடையை குறைத்து விட்டால், அது எப்போதும் அப்படியே நிரந்தரமாக இருந்து விடும். அதாவது டீடாக்ஸ் முறையை பின்பற்றி உடல் எடையை குறைக்கும் போது, எடை எப்போதுமே குறைந்து தான் இருக்கும். ஆனால் வேறு வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை குறைத்தால், மறுபடியும் சில நாட்களில் எடை அதிகரிக்கும்

சுவாமி பரமானந்த பிரக்ருதிக் சிகித்சாலயாவின் மருத்துவ ஆலோகர் டாக்டர். திவ்யா ஷரத் அவர்களின் கருத்துப்படி, 'உங்கள் உடலில் நச்சுக்கள் இருந்தால், உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இதனால் உங்கள் வாழ்வியல் முறையை சார்ந்து பல்வேறு விதமான வியாதிகள் உங்களை வந்து தாக்கும். டீடாக்ஸ் வழிமுறையானது நமக்கு இரு வழிகளில் பயன் தருகிறது. முதலில், இந்த வழிமுறை மூலமாக இது வரை நீங்கள் உணவில் உட்கொண்ட பல்வேறு கெட்ட பொருட்கள் வெளியேறி விடும். இரண்டாவது, உங்கள் உடல் எடை குறைந்து விடும், அதுவும் பல காலங்கள் நீடித்து நிற்கும். அதாவது உடல் பருமன் மறுபடியும் ஏற்படாது. டாக்டர் திவ்யா ஷரத்தை பொறுத்தவரை, உடல் எடையை குறைக்கும் டீடாக்ஸ் வழிமுறையில் வெவ்வேறு வழிகள் இருக்கின்றன.

இதுவும் உதவலாம் :எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

துரித உணவு இல்லாத டீடாக்ஸ்

இந்த வழிமுறையை பின்பற்றினால் நீங்கள் வெளியிடங்களில் சென்று சாப்பிடவே கூடாது. நீங்கள் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் துரித உணவுகளை அறவே தொட கூடாது. இந்த துரித உணவு இல்லாத டீடாக்ஸ்

வழியை மேற்கொள்ளும் போது, சில நாட்களிலேயே உங்கள் உடலில் பெரிய மாற்றம் தெரியும். உங்கள் உடல் லேசாகி விடும். உடல் எடை வேகமாக குறைய தொடங்கும்

தண்ணீர் டீடாக்ஸ் முறை

தண்ணீர் நச்சு நீக்கி என்பது நாள் முழுவதும் தண்ணீரை குடித்து டீடாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் அத்துடன் பழங்கள், காய்கறிகள் மற்றும் தண்ணீர் அதிகமாக உட்கொண்டு நச்சுக்களை வெளியேற்றம் செய்ய வேண்டும். இந்த வழிமுறையில் சர்க்கரை சேர்க்க அனுமதி கிடையாது. நீங்கள் ஆப்பிள், வெள்ளரி மற்றும் எலுமிச்சை தண்ணீருடன் சேர்த்து நாள் முழுவதும் உறிஞ்சலாம்

பழச்சாறு டீடாக்ஸ் முறை

juices for detox

எப்போதும் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் எப்போது டீடாக்ஸ் முறைகளை பின்பற்ற ஆரம்பித்தாலும், நீங்கள் மிக கடுமையாக உணவுகளை குறைத்து சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. இந்த டீடாக்ஸ் முறையில் நீங்கள் நாள் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து எடுக்கும் சாறுகளை குடித்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் ஒரு போதும் வெளியிடங்களில் சாப்பிட கூடாது, அதே போல வறுத்த உணவுகளையும் சாப்பிட கூடாது. இந்த சாறுகளிளான நச்சு நீக்கி முறையில் நீங்கள் அதிகப்படியான நீரை பருக வேண்டும்

ஸ்மூத்தி டீடாக்ஸ் வழிமுறை

மற்ற எல்லா டீடாக்ஸ் வழிமுறைகளை போல, இந்த வழிமுறையும் ஆரோக்யத்தை மேம்படுத்தும். ஸ்மூத்தி டிடாக்ஸில் காய்கறி மற்றும் பழங்களிளான ஸ்மூத்தி தான் இருக்கின்றன. மற்ற அனைத்து வழி முறைகளிலும் உள்ள அதே சட்ட திட்டங்கள் தான் இதிலும் இருக்கிறது. இந்த டீடாக்ஸ் முறையிலும் நீங்கள் வெளியே சென்று சாப்பிட கூடாது மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட கூடாது.

பின் ஏன் தாமதம், நீங்கள் காலம் முழுவதும் உங்கள் எடையை குறைத்து, உடலை கச்சிதமாக வைத்து கொள்ள விரும்பினால், நிச்சயம் மேற்கூறிய டீடாக்ஸ் வழிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யலாம்.

இதுவும் உதவலாம் :குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

Disclaimer