
வாழைக்காய் பஜ்ஜியில் தொடங்கி வாழைக்காய் வறுவல் வரை நாவில் எச்சில் ஊற செய்யும் பல அற்புதமான ரெசிபிகளை வாழைக்காயை கொண்டு செய்யலாம். பெரும்பாலும் வாழைப்பழங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாழைக்காய்க்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இன்றைய பதிவை நீங்கள் முழுமையாக படித்தீர்கள் என்றால், நிச்சயமாக வாழைக்காயை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.
வாழைக்காயில் நார்ச்சத்து வைட்டமின் C, வைட்டமின் A, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைக்காயை உங்களுடைய உணவு வழக்கத்தில் சேர்த்து வர பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இன்றைய பதிவில் வாழைக்காய் தரும் ஆரோக்கிய நன்மைகளை படித்தறிந்து பயன்பெறுவோம் வாருங்கள்…
இந்த பதிவும் உதவலாம்: இது தெரிந்தால், இனி தினமும் ஊற வைத்த பிஸ்தா சாப்பிடுவீங்க!

100 கிராம் வாழைக்காயில் 30-32% கொழுப்பு மட்டுமே உள்ளது. இது உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. மேலும் வாழைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. இதை சரியான அளவுகளில் உங்கள் உணவு முறையில் சேர்த்து வந்தால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வாழைக்காய் மற்றும் வாழை பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் தீர வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதைத்தொடர்ந்து உணவில் சேர்த்து வர செரிமான செயல்முறையும் சீராக நடைபெறும். வாழைக்காயை சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதோடு மட்டுமின்றி, வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
வாழைக்காயை பொட்டாசியம் சத்துக்களின் களஞ்சியம் என்று குறிப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். இதை சரியான அளவுகளில் உணவில் சேர்த்து வர நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம். மேலும் வாழைக்காயில் உள்ள வைட்டமின் B6 உடலின் செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும் வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரையின் அளவுகள் அதிகரித்து விடுமோ என்று எண்ணத்தில் பலரும் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். வாழைக்காய் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், சர்க்கரை நோயை விட்டு விலகி இருக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த இந்த அற்புதமான காய்கறி உங்களுடைய பசியையும் போக்கும்.
புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இந்த வாழைக்காயை வாரத்திற்கு 1-2 உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: நம்ம ஊரு மொச்சை பயறு, ஆரோக்கியமாக வாழ இது போதுமே!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com