நவீன கலாச்சாரம் என்கிற பெயரில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகளைத் தான் நமக்கு ஏற்படுத்துகிறது. குறிப்பாக இன்றைக்குப் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது பிசிஓஎஸ் பாதிப்பும், இதனால் ஏற்படும் குழந்தைப் பிறப்பு தாமதமும். முன்பெல்லாம் திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் குழந்தைகள் பிறக்கும். ஆனால் இப்பொழுதெல்லாம் 10 ஆண்டுகள் ஆகியும் பலர் குழந்தை இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்றைய கலாச்சாரம், உணவுப்பழக்க வழக்கங்களும் தான் இதற்கெல்லாம் முதன்மைக் காரணமாக அமைகிறது.
சமீபத்தில் 18 வயதுகளில் உள்ள பெண்களை ஆய்வு செய்த போது அதில் குறைந்தது 5 பேருக்காவது பிசிஓஎஸ் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும் என்று அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதோ உங்களுக்கான சில விபரங்கள் இங்கே..
பிசிஓஎஸ் (PCOS):
பாலிசிஸ்டிக் ஓவரின் சின்ட்ரோம் எனப்படும் பிசிஒஸ் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பெண்களுக்கு இயல்பைக் காட்டிலும் ஆண் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. இதோடு பெண்களுக்கு முகத்தில் முடி வளர்தல், முகப்பரு, மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிறு வயதில் ஏற்படக்கூடிய உடல் பருமனும் பிசிஓஎஸ் பிரச்சனை ஓர் காரணமாக உள்ளது.
ஏன் பாதிப்பு அதிகம்?
அக்காலத்துப் பெண்களை ஒப்பிடும் போது இன்றைக்கு உடல் உழைப்பு என்பது பெண்களிடம் சுத்தமாக உள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை, நொறுக்குத் தீனிகள், எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதும் பிசிஓஎஸ் பிரச்சனைக்கு ஒரு காரணமாக அமைகிறது. இவற்றை முறையாக கவனித்துக்கொள்ளாத போது தான், கருமுட்டை வெளியேறாமல் பெண்களுக்கு குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது.
பாதிப்பைக் கண்டறிவது எப்படி?
- பெண்களுக்கு 28 நாள்கள் சுழற்சியில் மாதவிடாய் வராமல் இருப்பது கண்டறியப்பட்டால் நீங்கள் கட்டாயம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு சிலருக்கு 3 மாதங்கள் ஆனாலும் பெண்களுக்கு மாதவிடாய் வராது. இதனால் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதுப்போன்ற பாதிப்புகளை நீங்கள் கண்டறிந்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன் பிரச்சனையா? அல்லது பிசிஓஎஸ் பிரச்சனையா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation