Hair colour: உஷார் பெண்களே.. தலைமுடிக்கு கலரிங் செய்வதால் இத்தனைப் பாதிப்புகள்!

இயற்கைக்கு மாறாக நாம் என்ன செய்தாலும் அதனால் பல பிரச்சனைகளை நிச்சயம் சந்திப்போம்

hair colouring affects

தலைமுடியைக் கட்டி மலையைக்கூட இழுக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப தான் அக்காலத்துப் பெண்களின் தலைமுடிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெந்தயமும், கரம்பை மண்ணும் தான் அவர்களின் ஷாம்புகளாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது.

நவீன கலாச்சாரம் என்ற பெயரில் நீளமான தலைமுடியை பெண்கள் விரும்புவதில்லை. அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தலைமுடிக்கு விதவிதமான ஹேர் கலரிங் செய்கிறார்கள் பெண்கள். இது பார்ப்பதற்கு வேண்டும் என்றால் அழகாக தெரியலாம். ஆனால் இதில் உள்ள பாதிப்புகள் ஏராளம். இதோ ஹேர் கலரிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பது குறித்து வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்..

Hair colour problem

ஹேர் கலர் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்:

  • சிவப்பான கண்கள்:தலைமுடிக்கு சாயம் அதாவது கலரிங் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது உங்களது கண்களை நேரடியாகப் பாதிக்கும். இதில் உள்ள கெமிக்கல் உங்களது கண்களுக்கு எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதோடு கண்களை சிவப்பாகக்கூடும்.
  • ஒவ்வாமை: இயற்கைக்கு மாறாக நாம் என்ன செய்தாலும் அதனால் பல பிரச்சனைகளை நிச்சயம் சந்திப்போம். இதுப்போன்று தான் கலரிங் செய்யும் போதும். செயற்கை ரசாயனங்கள் தோல் அழற்சி, தோல் தடிப்பு, எரிச்சல், சிவத்தல் ,தோல் வீக்கம் போன்ற பல்வேறு ஓவ்வாமைகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.
  • ஆஸ்துமா: தலைமுடிக்கு கலரிங் செய்வதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று தான் ஆஸ்துமா. தலைமுடியில் நேரடியாக அப்ளே செய்யும் போது இதில் உள்ள சாயங்களை நேரடியாக உடலுக்குச் செல்ல நேரிடும். இதனால் இருமல், மூச்சுத்திணறல், நுரையீரல் வீக்கம், தொண்டை போன்ற பிரச்சனைகளோடு ஆஸ்துமா பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.ஏற்கனவே உங்களது ஆஸ்துமா பிரச்சனைகள் இருந்தால், ஹேர் டையிங் செய்வது மிகுந்த தீங்கு விளைவிக்கும்.
  • கர்ப்பத்தில் பாதிப்பு: கருவுற்ற காலத்தில் நீங்கள் தலைமுடிக்கு கலரிங் செய்யும் போது,வயிற்றில் உள்ள குழந்தைகளையும் நேரடியாக பாதிக்கிறது.
  • முடி உதிர்தல்: இயற்கையான தலைமுடியை அழகுப்படுத்துகிறோம் என்ற பெயரில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதோடு பலவீனமான முடி, முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது.

பாதிப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

women hair grow tips

நம்முடைய தலைமுடி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்களை உபயோகிக்கிறோம். இதற்கு மாற்றாக நீங்கள் அவுரி, மருதாணி, கரிசலாங்கன்னி, பீட்ரூட் சாறு போன்ற இயற்கை சாயத்தை நீங்கள் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களுக்கு ஹேர் கலரிங் தான் செய்ய வேண்டும் என்றால் அழகுக்கலை நிபுணர்களின் பரிந்துரையின் படி நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP