இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் முதல் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மன அழுத்தம்.
24 மணி நேரமும் மொபைல் போன்களை உபயோகித்துக்கொண்டு, நமக்கானவர்களுடன் பேசாமல் இருப்பதே மன அழுத்தத்திற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு மன அழுத்தம் ஒரு தொற்று நோயாகவே உருவெடுத்துள்ளது. இதிலிருந்து நீங்கள் தப்பித்து உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று நினைத்தால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே…
மன அழுத்தத்தைக் குறைக்க செய்ய வேண்டியது:
- தனிமையில் இருப்பதும் மன அழுத்தத்திற்கு முதன்மைக்காரணமாக அமைகிறது என்பதால், முடிந்தவரை பிடித்த வேலைகளுடன் கமிட் ஆகிக்கொள்ளுங்கள். பிடித்த உங்களது நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் பேசி மகிழ்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- குடும்பத்தில் உள்ளவர்களால் மட்டுமில்லை சில நேரங்களில் அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் டார்ச்சர் நமக்கு மன உளைச்சலைத் தரக்கூடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தினசரி வாழ்க்கையில் ஒரு 5 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். இது உங்களின் மனதை ஒருமனப்படுத்தும். தேவையில்லாத யோசனைகள் எழாது.
- மன அழுத்தம் என்பது நமது உடலில் A, B, C மற்றும் E போன்ற சில வைட்டமின்களைக் குறைக்குப்பதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால், சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது, உங்கள் மனம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நேர்மாறாகவும் இருக்கும். உடல் உடற்பயிற்சி ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
- வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங், யோகா அல்லது நீச்சல் போன்ற சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
- எந்த வேலையை நீங்கள் செய்தாலும் சில நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளவும். இது உங்களது தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்த உதவுவதோ மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- சமூக ஊடகத் தளங்களில் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தை உண்டாக்கும் என்பதால் பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் மொபைல் மற்றும் சோசியல் மீடியாப் பயன்பாடுகளை நிறுத்திவிடவும். முறையான தூக்கம் இல்லாததும் உங்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
- அதற்கு மாற்றாக நண்பர்களைச் சந்திப்பது, பிடித்த இடங்களுக்கு பயணிப்பது மற்றும் புத்தகங்களைப் படிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation