herzindagi
Hair loss care

Reason for Hair Fall: தினமும் முடி கொட்டுவதற்கானக் காரணம் தெரிஞ்சுக்கணுமா?அப்ப முதல்ல இத படிங்க!

<span style="text-align: justify;">பெண்கள் முடி உதிர்வதைத் தடுக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</span>
Editorial
Updated:- 2023-12-15, 22:29 IST

பெண்கள் மற்றும் ஆண்களின் தலைமுடி தான் அவர்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். முடி கொட்டினாலும், முடியில் ஆங்காங்கே வெள்ளைத் தெரிந்தாலும் நம்மை அறியாமலே மனத்தில் ஒரு சோகம் ஏற்படும். தினமும் தலைவாரும் போது முடி கொட்டுவது என்பது இயல்பான ஒன்று தான். அதற்கென கொத்து  கொத்தாக முடி கொட்டினால் நிச்சயம் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்ன காரணம்? என தெரியாமல் கவலைப்பட ஆரம்பித்துவிடுவோம்.

இனி இந்த கவலை வேண்டாம். முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க: குளிர்காலத்தில் உங்களது பாதங்களைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்!

hair care tips

முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள்:

  • மாசுபாடு: இன்றைய சுற்றுப்புற சூழல் மிகவும் மோசமாகியுள்ளது. அதிகரித்து வரும் வாகனங்கள், தொழில்நிறுவனங்களால் அதீத மாசுபாடு ஏற்படுகிறது. இது உங்கள் முடி உதிர்வதை முக்கிய காரணமாக அமைகிறது. தூசிகள், வாகன புகை போன்றவையும் முடி கொட்டுவதற்கு ஓர் காரணமாக உள்ளது.
  • நோய் மற்றும் மருந்து: உணவு பழக்கங்கள் மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்கள் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. இளம் வயதிலேயே பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் ஒவ்வாமை ஏற்படும். இது மட்டுமின்றி சில நேரங்களில் முடி உதிர்வுக்கும் காரணமாக அமைகிறது.
  • இரத்த சோகை, இரும்புச்சத்து குறைபாடு,பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (பிசிஓஎஸ்), தைராய்டு போன்ற பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்: வைட்டமின்கள், புரதம் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் போது முடி உதிர்வு பிரச்சனை உண்டாகக்கூடும்.
  • முடி சிகிச்சைகள்: தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நம்மில் பலர், ஹேர் கட், ஹேர் ஸ்ட்ரைட்னிங், கலரிங் என பல்வேறு முறைகளை இன்றைக்குக் கையாள்கின்றனர். இதனால் தலைமுடியில் இயற்கையான அனைத்து முறைகளும் மாறுவதால் முடி உதிர்வதும் ஏற்படுகிறது.

Hair fall

  • பரம்பரை:ஜெனிடிக் பிரச்சனைகளால் சில குடும்பங்களில் உள்ள இளம் வயதுடைய நபர்களுக்கு முடி கொட்டி வழுக்கை ஏற்படும். பெண்களுக்கு முடி வளர்ச்சியைக் கம்மியாக இருக்கும். 
  • ஹார்மோன் சமநிலையின்மை:  உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனையை பெண்கள் சந்திக்க நேரிடும்.
  • தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையும் முடி உதிர்வுக்குக் காரணமாகிறது.
  • நமது உடலில் துத்தநாகக் குறைபாடு முடி வளர்ச்சியை பாதிக்கலாம் மற்றும் முடி மெலிந்து போகக்கூடும்.
  • உடலின் பயோட்டின் குறைபாடும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
  • மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடும் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பெண்களுக்கு இரும்புச்சத்து போதுமான அளவில் இல்லாத போது முடி வளராது மற்றும் படிப்படியாக முடியை மெல்லியதாக மாறக்கூடும்.

மேலும் படிக்க: குழந்தைகளை குளிர்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி? பெற்றோருக்கான குறிப்புகள்

சாப்பிட வேண்டிய உணவுகள்:

Hair fall food

பெண்கள் முடி உதிர்வதைத் தடுக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கேரட், முட்டை, பீன்ஸ், பச்சைக்காய்கறிகள்,நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை உங்களது டயட்டில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com