மழை,பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.குளிர்காலத்தில் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவிட மருத்துவர்களிடம் பெற்ற ஆலோசனைகளை இங்கே பகிர்கிறோம்.
குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை , மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு , ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் காய்ச்சல் மிக எளிதாக பரவும். இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. காய்ச்சல் கடுமையானது அல்ல, ஆனால் சில நாட்களுக்கு நம்மை சோர்வாக்கி விடும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் அறிகுறிகள் :
குளிர்காலத்தின் பொதுவான் நோய் என்றால் அது ஜலதோஷம் தான் , குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும் , ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரஸால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி , வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரஸின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும் , கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.
மேலும் படிங்க தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய உதவிகள்
குழந்தையின் வயதிற்கு ஏற்ப அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப் அல்லது தண்ணீர் கொண்டு கைகளை நன்றாக சுத்தப்படுத்திட குழந்தையை அறிவுறுத்துங்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சத்தான உணவை வழங்கி குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடுங்கள். சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள். கதகதப்பு தரும் சூப் வழங்கிடுங்கள்.
மேலும் படிங்க குளிர்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் டாப் 5 சூப்ஸ்
குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருந்தால் , குழந்தையை அவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி வைத்திருங்கள். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு மாஸ்க் அணிவிக்காமல் அனுப்ப வேண்டாம். குளிர்காலத்திற்கு ஏற்ற கதகதப்பான ஆடைகளை அணிய அறிவுறுத்துங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com