keep feet warm in winter:குளிர்காலத்தில் உங்களது பாதங்களைப் பாதுகாப்பதற்கான டிப்ஸ்!

குளிர்காலத்தில்  கால் விரல்களின் இடுக்குளில் புண்கள் ஏற்படக்கூடும் என்பதால் ஷாக்ஸ்கள் மற்றும் செப்பல்களை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்

feet warming in winter
feet warming in winter

குளிர்காலம் என்றாலே ஜில்லென்ற சூழல் மனதை இதமாக்கும் என்றாலும், வைரஸ் தொற்று உள்பட பல்வேறு சரும பிரச்சனைகளும் நமக்கு ஏற்படும். இந்நேரத்தில் உங்களை சூடாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். குளிர்காலத்தில் சருமம் வறண்டு விடுவது போன்று கால் பாதங்களிலும் சேற்றுப்புண், எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடும்.

எனவே குளிர்காலத்தில் சருமத்தைப் பராமரிக்க எந்தளவிற்கு அக்கறைக் காட்டுகிறோமோ? அந்தளவிற்கு பாதங்களைப் பராமரிப்பதிலும் முனைப்புடன் இருக்க வேண்டும். இதோ எப்படி? என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்.

Tips for feet warm in winter

குளிர்காலத்தில் பாதங்களைப் பராமரிக்கும் முறை:

குளிர்காலத்திற்கு ஏற்ற செப்பல்கள்:

நவம்பர் முதல் ஜனவரி வரை மாதம் வரை குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் கால்களில் பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, உயர்தர காலணிகளை உபயோகிக்க வேண்டும்.

சாக்ஸ் அணிதல்:

  • வீட்டிற்குள் இருந்தாலே பலருக்கு அதீத குளிர் இருப்பது போன்று உணர்வு ஏற்படு்ம். கால்களைத் தரையில் வைத்தாலே ஜில்லென்று ஏற்படும் சூழலால் அசௌகரியமான சூழலை அனுபவிக்க நேரிடும். இந்நேரத்தில் நீங்கள் சாக்ஸ்களை அணியலாம்.
  • குளிருக்கு இதமாக இருப்பதோடு, உடலை சூடாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.

லெக் வார்மர்களைப் பயன்படுத்துதல்:

  • குளிர்ந்த நிலையில் உங்களது பாதங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு லெக் வார்மர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • முட்டிவரை லெக் வார்மர்களை நாம் பயன்படுத்தும் போது குளிர்காலத்தில் நமது பாதங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க:குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய இந்திய பழங்களின் லிஸ்ட்!

குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

feet care in winter

  • குளிர்காலத்தில் நீங்கள் எப்போதும் உங்களது பாதங்களை சூடாக வைத்துக் கொள்ளவும், சேற்றுப்புண் போன்றவற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நீங்கள் கல் உப்பு கலந்து சூடான நீரில் உங்களது கால்களுக்கு சிறிது நேரம் மசாஜ் கொடுப்பது நல்லது.
  • அதீத பனி அல்லது மழைப்பொழிவினால் உங்களது கால்களுக்குள் தண்ணீர் புகாமல் இருப்பதற்கு நீர்ப்புகா செப்பல்களை உபயோகிப்பது நல்லது.
  • நிச்சயம் குளிர்காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது கடினமான ஒரு விஷயமாகத் தான் இருக்கும். ஆனாலும் நீங்கள் உடற்பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
  • பாதங்களுக்கு மசாஜ் செய்தும் உங்களது கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய முடியும்.
  • பொதுவாக பாதங்களில் அதிகளவில் தண்ணீர் படும் போது பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எனவே நீங்கள் குளிர்காலத்தில் உங்களது செப்பல்களில் தண்ணீர் மற்றும் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிச்சல் அதிகமாக இருக்கும் போது எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து தடவவும்.
  • குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் கால் விரல்களின் இடுக்குளில் புண்கள் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் உபயோகிக்கும் ஷாக்ஸ்கள் மற்றும் செப்பல்களை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
  • இதோடு மட்டுமின்றி உங்களது பாதங்களை சூடாகவும், இரத்த ஓட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால், இறுக்கமான செப்பல்கள் மற்றும் சாக்ஸ்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP