நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் உடலுக்கு வழங்கும் நன்மைகள் ஏராளம். வெயிட் லாஸ் தொடங்கி சரும பராமரிப்பு வரை பல தேவைகளுக்கு வெள்ளரிக்காயை பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் மட்டுமில்லை அதில் இருக்கும் விதைகளும் உடலுக்கு மிகவும் ஏற்றது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உடல் எடையை இயற்கையாகவே குறைக்க வெள்ளரி விதைகள் கைக்கொடுக்கிறது. வெள்ளரி விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் தாரளமாக உடல் எடையை குறைக்க வெள்ளரி விதைகளை உட்கொள்ளலாம். வெறுமையாக சாப்பிடுவதை காட்டிலும் இந்த வழிகளில் வெள்ளரி விதைகளை உட்கொண்டால் முழு பயனை பெறலாம்.
காலையில் ஸ்மூத்தி குடிக்கும் போது அதில் வெள்ளரி விதைகளை சேர்க்கலாம். அல்லது வெள்ளரி விதைகளை பொடியாக அரைத்து, பவுடராகவும் ஸ்மூத்தியில் சேர்த்து குடிக்கலாம்.
காலை உணவில் எடுத்து கொள்ளும் சாலட்டில் வெள்ளரி விதைகளை சேர்த்து கொள்ளலாம். அதே போல் வெள்ளரி விதைகளை நீண்ட காலம் சேமித்து வைத்து உட்கொள்வதை தவிர்க்கவும்.
முதல் நாள் இரவே 1 டம்ளர் நீரில் ஒருகைபிடி அளவு வெள்ளரி விதைகளை ஊற வைக்கவும். பின்பு காலை வெறும் வயிற்றில் அந்த நீரை அப்படியே குடிக்கவும்.
வழக்கமாக குடிக்கும் க்ரீன் டீ அல்லது பிளாக் டீயில் வெள்ளரி விதைகளை சேர்த்து குடிக்கலாம். அல்லது வெந்நீரில் வெள்ளரி விதைகளை சேர்த்து அப்படியே குடிக்கலாம். உடல் எடையை குறைக்க வெள்ளரி விதைகளை இந்த முறைகளில் எடுத்து கொள்ளவும்.
குறிப்பு: சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின்பு வெள்ளரி விதைகளை சாப்பிடவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com