ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்ட சத்தான பழ வகையை நீங்கள் தேடுகிறீர்களா? நட்சத்திர பழத்தை உங்கள் பழவகை உணவுகளில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நட்சத்திர பழம் சுவையில் மட்டும் உங்களை திருப்திபடுத்தாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
கேரம்போலா, வெப்ப மண்டல பழம் என்று அழைக்கப்படும் நட்சத்திர பழம் ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு சுவை உடைய பழமாகும். இது ஆகாயத்தில் உள்ள நட்சத்திர வடிவத்தை கொண்டுள்ளது. இதன் லேசான மற்றும் புளிப்பு சுவையானது பார்ப்பதற்கும் சாப்பிடவும் மிகவும் அருமையான உணர்வை கொடுக்கும். பல நட்சத்திர விடுதிகளில் பழ வகைகளை செய்யும் போது கட்டாயம் நட்சத்திர பலமும் அதில் இருக்கும். ஏனென்றால் இதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளால் இது தனித்து நிற்கிறது. நட்சத்திர பழத்தை பழமாகவோ பல சாறாகவோ அல்லது பல்வேறு பரியனாமங்களில் உணவில் சேர்த்து ருசித்தால் பல ஆரோக்கிய நன்மைகளை நாம் பெறலாம். ஏனென்றால் இந்த நட்சத்திர பழம் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது முதல் உடல் செரிமானத்தை அதிகரித்து பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
மேலும் படிக்க: வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பழம், எது தெரியுமா?
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ள பழம் என்றால் நட்சத்திர பழம் அதில் தனித்து நிற்கும். ஏனென்றால் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தின் உயர் மூலம் இதில் உள்ளது. இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு வழி வகுத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நட்சத்திர பழம் அதன் இயற்கையான செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சீரான செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், மலச்சிக்கலை தடுக்க நட்சத்திர பழம் உதவுகிறது. இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமான பிரச்சனைகளை குறைக்கலாம்.
சிறந்த ஆரோக்கியற்றதிற்கு நீரேற்றமாக நாம் இருப்பது அவசியம். உடலை நீரேற்றமாக வைத்திருக்க நட்சத்திர பழம் அதற்கு உதவும். இதில் உள்ள அதிக நீர் சேர்த்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கிறது. மேலும் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை தர ஊக்குவிக்கிறது.
நட்சத்திர பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இதயத்திற்கு உகந்தது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. நட்சத்திர பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் படிக்க: மருத்துவ குணங்கள் கொண்ட மகத்தான பப்பாளி பழம்
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com