உடல் பருமான பெண்கள் டயட் முறையை பின்பற்றுவது சகஜமான ஒன்று. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அனைவரும் பொதுவாக தங்கள் உடல் எடையை முடிந்த வரை வேகமாக குறைக்க விரும்புகிறார்கள். எந்த ஒரு விஷயத்திலும் உடனடி ரிசல்ட் கிடைக்க வேண்டும் என நினைப்பது மனிதனின் இயல்பான குணம். ஆனால் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்தால் மட்டுமே அதனால் கிடைக்கும் பலனை கண்கூட பார்க்க முடியும். இந்த விஷயத்தில் உடல் எடையை குறைக்க பின்பற்றும் வழிகளும் ஒன்று தான். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என அனைத்தையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
டயட் என்ற பெயரில் நீங்கள் உங்கள் உணவுகளை சாப்பிடாமல் கைவிட்டாலும் ஆபத்து தான் அல்லது அளவுக்கதிகமான உடற்பயிற்சிகளை ஒரேயடியாக மேற்கொள்வதும் ஆபத்து தான். இது போன்ற செயல்களை செய்து உடல் எடையை குறைத்தால் மீண்டும் அதே உடல் எடை சில மாதங்கள் கழித்து கூடி விடும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த செயல்கள் உங்கள் உடல் நிலையை பாதித்து விடும். அதே போல் டயட்டில் ஓட்ஸ், பழங்கள், ஜூஸ், சப்பாத்தி போன்றவற்றை மட்டும் தான் உண்ண வேண்டும் என பலரும் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான கம்பு இட்லி, ஓட்ஸ் இலி, தோசைகளும் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் தரும் யோகா !
எனவே, இந்த பதிவில் உடல் எடையை குறைக்க உதவும் தோசை வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
வல்லாரை கீரை தோசை
வல்லாரை கீரையை கடாயில் சேர்த்து நன்கு வதக்கி, அதில் பூண்டு, சீரகம், சேர்த்து அரைத்து, அந்த கலசையை மாவில் சேர்த்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு வழக்கம் போல் இந்த மாவை தோசை ஊற்றி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துகும், நல்லது, உடல் எடையையும் குறைக்கலாம்.
நவ தானிய தோசை
நவ தானியங்களை 8 மணி நேரம் வைத்து குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். பின்பு மாவில் தோசை ஊற்றி, அதன் நடுவில் மசாலா போல் இந்த நவதானியங்களை மசித்து வைத்து தோசையை சுட்டு எடுக்கவும். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
பச்சை பயிறு தோசை
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக இதை எடுத்து கொள்ளலாம். பச்சை பயிரை ஊற வைத்து அதை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். இன்பு அதை தோசை மாவில் கலந்து, வழக்கமான தோசை போல் சுட்டு எடுக்கவும்.
கம்பு தோசை
1 கப் கம்பு மற்றும் 1 கப் உளுந்து சேர்ந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு இதை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். இந்த மாவை 2 மணி அப்படியே விடவும். பின்பு இதை தோசையாக ஊற்றி சாப்பிடவும். இது உடல் கொழுப்பை குறைக்கும்.
முருங்கைக்கீரை தோசை
முருங்கைக்கீரையை கடாயில் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும். பின்பு இதை தோசை மாவில் கலந்து, வெங்காயம் சேர்த்து சுட்டு எடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது. எடையை குறைக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்:ஜோடியாக உடல் எடையை குறைக்க டிப்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik