உடல் பருமன் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. நீரிழிவு முதல் பிபி மற்றும் பிசிஓடி வரை எடை அதிகரிப்பதால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய 2 வழிகள் மட்டுமே உள்ளன. உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி. அதிலும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையும் குறையும் அதே போல் உடலுக்கு ஆரோக்கியமும் பெருகும்.
தற்போதைய சூழ்நிலையில் ஆண்கள் - பெண்கள் இருவரும் உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர். இருவரும் இணைந்து உடல் எடையை குறைக்கலாம். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி உடற்பயிற்சியை கடைப்பிடித்தால் போதும். உடல் எடை குறைப்பது மிக மிக சுலபம். எனவே, இந்த பதிவில் கணவன் - மனைவி இருவரும் ஜோடியாக சேர்ந்து உடல் எடையை குறைப்பது எப்படி? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் தரும் யோகா !
உடல் எடையை குறைக்க ஜாக்கிங் பெரிதும் உதவுகிறது. எனவே, காலை நேரத்தில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்த்து ஜாக்கிங் செய்யலாம். வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்குக்கு சேர்ந்து சென்று நடைப்பயிற்சியும் செய்யலாம். இருவரும் மனம் விட்டு பேசவும் இது சரியான நேரம். குடும்பத்தின் பொருளாதாரம், திட்டங்கள், குழந்தைகளின் எதிர்காலம் என பல விஷயங்களை இந்த நேரத்தில் பேசலாம். அதே போல் இருவரின் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
உடல் எடையை குறைக்க யோகா பயிற்சியும் மேற்கொள்ளாம். வீட்டில் யோகா செய்ய நேரமில்லாதவர்கள், வீட்டில் இடமில்லாதவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் யோகா பயிற்சி வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம். கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து சென்று யோகா பயிற்சியை மேற்கொண்டு ஒன்றாக வீடு திரும்பலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
உடல் எடையை குறைக்க டயட்டிலும் இருக்கலாம். கண்டிப்பாக இந்த விஷயத்தில் கணவன் - மனைவி இருவரும் பேசி வைத்து கொண்டு உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டாம். ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும். மனைவி வீட்டில் செய்யும் ஹெல்தியான உணவுகளை கணவர், முகம் சுளிக்காமல் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் இருவரும் டயட் பட்டியலில் சீராக இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com