கர்ப்ப காலத்தில் பெண்கள் மனநிலை மாற்றம், காலை சுகவீனம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் இது தவிர மற்றுமொரு பிரச்சனையும் உள்ளது, இதை கிட்டத்தட்ட எல்லா பெண்களும் எதிர்கொள்கின்றனர். அது தான் உடல் எடை அதிகரிப்பு. உண்மையில், கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களை கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையேல், அவர்களின் உடல் எடை ஆரோக்கியமற்ற வகையில் அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடுவது சகஜம் என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. உதாரணமாக, முதல் மூன்று மாதங்களில் உங்கள் எடை ஒன்று முதல் மூன்று கிலோ வரை அதிகரிக்கலாம். அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் 500 கிராம் எடை அதிகரித்தால், நீங்கள் பயப்பட வேண்டாம். ஆனால் இதை விட அதிகமாக எடை அதிகரித்தால், நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே இன்று இந்த பதிவில், கர்ப்ப காலத்தில் கூட ஆரோக்கியமான எடையை பராமரிக்க சில எளிய குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலம், நீங்களும், உங்கள் குழந்தையும் போதுமான ஊட்டச்சத்தைப் பெறுவீர்கள். உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல வகையான ஆசைகள் வரும், இதில் இனிப்பு சாப்பிடுவதற்கான ஏக்கமும் ஒன்று. ஆனால் அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது எந்த வகையிலும் சரியானதாக இருப்பதில்லை. இது உடல் எடையை அதிகரிப்பதோடு, குழந்தையின் நினைவாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு இனிப்பு சாப்பிட ஆசைவரும் போது, சர்க்கரை உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்துவது முக்கியம். முடிந்தவரை, உங்களுக்கு சர்க்கரை சாப்பிட ஏக்கம் இருக்கும்போது, அதற்கு மாற்றாக ஆரோக்கியமான பழங்களை சாப்பிட முயற்சிக்கவும்.
கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு சரியாக தூங்குவதில் அடிக்கடி சிரமம் ஏற்படும். ஆனால் போதுமான தூக்கம் இல்லாத போது, உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் எடை அதிகரிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள். உங்களை அமைதிப்படுத்த நீங்கள் தியானம் செய்யலாம் அல்லது இசையை கேட்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பார்கள், அதனால் உடற்பயிற்சிகளை தவிர்க்கிறார்கள். ஆனால் நீங்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்பினால், உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இருப்பினும், நீங்கள் தீவிர உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. அதே நேரத்தில், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம், முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்பினால், உங்கள் உடலின் நீர் சத்தின் அளவைக் கவனிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, அது உங்களுக்கு பல்வேறு வகையான பசியைத் தருகிறது. மேலும், அந்த பசியை போக்க நீங்கள் சாப்பிடுவதால், உங்களின் எடை அதிகரிக்க தொடங்குகிறது. இதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து இல்லாததால் சோர்வு, தசைவலி, அதிகப்படியான பசி, தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எனவே, இந்த குறிப்புகளை பின்பற்றி நீங்கள் கர்ப்ப காலத்தில் கூட ஆரோக்கியமான உடல் எடையில் இருக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik, herzindagi
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com