beauty tips aloe vera

முகத்தைப் பளபளப்பாக்குவதற்குக் கற்றாழையை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

<span style="text-align: justify;">ஆரோக்கிய நன்மைகளை கற்றாழை கொண்டுள்ளதால் வாரத்திற்கு ஒருமுறையாவது கற்றாழையைக் கொண்டு முகத்தில் பொலிவாக்குவதற்கு முயற்சி செய்யவும்.</span>
Editorial
Updated:- 2024-04-03, 21:44 IST

தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்ல வேண்டிய நிலை இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்க்கத் தான் செய்வோம். அந்தளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. உடல் பாதிப்பை மட்டுமல்ல, பெண்களின் சருமத்திற்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சருமம் வறண்டு விடுதல், கரும்புள்ளிகள் ஏற்படுதல், முக சுருக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாக உள்ளது கற்றாழை. 

கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. இதோ எளிமையான முறையில் எப்படி கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

aloe vera face mask ()

மேலும் படிக்க: மொபைல், லேப் டாப் பயன்படுவதால் மணிக்கட்டு வலிக்கிறதா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!

முக பளபளப்பிற்கு காற்றாழையைப் பயன்படுத்தும் முறை:

  • பெண்கள் அழகைப் பராமரிப்பதற்கு முதன்மை தேர்வுகளில் ஒன்றாக உள்ளது கற்றாழை. கடைகளில் விதவிதமான கற்றாழை ஜெல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், இயற்கையான முறையில் பெற்றுக் கொள்வது நல்லது. வீடுகளில் வளர்க்கப்படும் கற்றாழைகளில் உள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்யவும். இதில் உள்ள காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுகள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.
  • சுட்டெரிக்கும் வெயிலால் பெண்களின் சருமம் சீக்கிரம் வறண்டு விடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து உபயோகிக்கலாம். இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் சருமம் வறண்டு விடுவதைத் தடுக்கிறது. மேலும் விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்க உதவியாக உள்ளது.
  • கற்றாழையுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போது, முகம் பொலிவடைவதோடு, கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள் மற்றும் முகப்பருகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. முகத்தில் மட்டுமல்ல, கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வந்தால் வெயில் காலத்தில் உதடுகள் வறண்டு விடுவதையும் தடுக்க உதவுகிறது.
  • மேலும் கற்றாழை ஜெல்லை இரவில் முகத்தில் தடவ வேண்டும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளால் சருமம் எப்போதும் ஈரப்பதமாகவும், உடலை குளிச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  • கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள், தயிர், எலுமிச்சை போன்றவற்றைக் கலந்தும் முகத்தில் அப்ளை செய்யவும். காலையில் அல்லது இரவு நேரத்தில் முகத்தில் அப்ளை செய்து வரவும். பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: 2 வாரங்களில் தொப்பை மற்றும் தொடை பகுதி கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!!

இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கற்றாழை கொண்டுள்ளதால் வாரத்திற்கு ஒருமுறையாவது கற்றாழையைக் கொண்டு முகத்தில் பொலிவாக்குவதற்கு முயற்சி செய்யவும்.

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com