wrist pain relief

Wrist Pain: மொபைல், லேப் டாப் பயன்படுவதால் மணிக்கட்டு வலிக்கிறதா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!

<span style="text-align: justify;">யோகா, தியானம், ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு எலும்புகளும் வலுப்பெறும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-04-04, 15:02 IST

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி பல வகைகளில் மக்களுக்கு உதவியாக இருந்தாலும், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 24 மணி நேரமும் மொபைல் அல்லது லேப்டாப்களில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். தொடர்ச்சியாக மொபைல் ஸ்கோரேல் செய்வது, லேப்டாகளில் தட்டச்சு அதாவது டைப் செய்து போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது விரல்கள் அதிக வேலையில் ஈடுபடுகிறது. இதனால் கை மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் அதிக வலியை அனுபவிக்க நேரிடுகிறது. 

குறிப்பாக ஒர்க் ப்ரம் ஹோம் செய்பவர்கள் ஆரம்பத்தில் சந்திக்கும் உடல் நலப் பாதிப்புகளில் ஒன்றாக உள்ளது மணிக்கட்டு வலி. பணிக்கு சென்றால் கூட 1 மணி நேரமாவது ஓய்வு கிடைக்கும். ஆனால்  தொடர்ச்சியாக வீடுகளில் பணியாற்றுவதால் இளைஞர்களுக்குக் கூட மணிக்கட்டு பலவீனம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இதனால் மன சோர்வு, உடல் அசௌகரியம் போன்ற பாதிப்பைச் சந்திக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளையும், வீட்டு வைத்தியங்களையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

wrist pain treartment

மேலும் படிக்க: இரவில் பல் துலக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? பக்க விளைவுகள் என்ன?

மணிக்கட்டு வலியைப் போக்கும் வீட்டு வைத்தியங்கள்:

  • நாள் முழுவதும் தொடர்ச்சியாக கணினியில் தட்டச்சு செய்யும் போது கை வலி அதிகமாக இருக்கும். எனவே இந்நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை மடக்கி நீட்டும் போது, கைகளில் இரத்த ஓட்டம் மேம்படும். இதோடு கைகளுக்கு நெகிழ்வு தன்மையைக் கொண்டு வர முடியும்.
  • வலி இருக்கும் இடத்தில் சுடு தண்ணீர் ஒத்தனம் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தனம் வைக்கவும். இவ்வாறு மேற்கொள்ளும் போது வலி தற்காலிகமானதாக இருக்கும். இருந்தாலும் கைகளில் வீக்கத்தைக் குறைக்க உதவும். வீக்கம் குறையும் போதே வலியும் படிப்படியாக குறையக்கூடும்.
  • நோய் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ள மஞ்சளை நீங்கள் வலி அதிகம் உள்ள இடம் அல்லது வீக்கம் உள்ள இடத்தில் தண்ணீரில் அல்லது தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவும்.. வலியைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • 24 மணி நேரமும் தொடர்ச்சியாக டைப் செய்துக் கொண்டிருக்கும் போது ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால் ஓய்வு அவசியம். எனவே வலி அதிகமாவதை உணந்தால் 2 நாட்களுக்காவது எவ்வித பணிகளைச் செய்யாதீர்கள்.

மேலும் படிக்க: 2 வாரங்களில் தொப்பை மற்றும் தொடை பகுதி கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!!


wrist pain relief treatment

யோகா, தியானம், ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு எலும்புகளும் வலுப்பெறும்.  இதுபோன்ற முறைகளைத் தொடர்ச்சியாக பின்பற்றி உங்களுக்கு ஏற்படக்கூடிய மணிக்கட்டு வலியைக் குணப்படுத்த முயற்சி செய்வது நல்லது.

Image soure - Google 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com