வாழ்க்கையில் நாம் அனைவருமே எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ விரும்புவோம். உடல்நலம் பேணினால் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆரோக்கியத்தை பற்றி நமது கவலைகள் நீங்கும் போது மகிழ்ச்சியாக இருக்கலாம். நீண்ட ஆயுளுக்கு சிறந்த வாழ்க்கைமுறை அவசியம் என நாம் புரிந்து கொண்டால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்கலாம். இதற்கான எளிய வழிகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவு
உங்கள் அன்றாட உணவு பழக்கத்தில் பழங்கள், காய்கறிகளை போதுமான அளவில் சேர்த்து முழுமையான ஊட்டச்சத்தை பெறுங்கள். சீரான உணவுப்பழக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. பழங்களில் உங்களுக்கு போதுமான வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்கின்றன.
உடற்பயிற்சி
விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங், யோகா போன்ற வழக்கமான உடல்நல செயல்பாடுளை தவறவிட வேண்டாம். உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
போதுமான தூக்கம்
உங்கள் உடலையும் மனதையும் ரீசார்ஜ் செய்ய தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கவும். போதுமான தூக்கம் நோய் எதிர்ப்பு மண்டலம் உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தடையற்ற தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.
மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்
மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளான தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிளை செய்யவும். நினைவாற்றலை அதிகரிக்கவும், நல்வாழ்வை பேணுவதற்கும் மன அழுத்த மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள். மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும்.
மேலும் படிங்கமகிழ்ச்சியாக வாழ உதவும் முக்கியமான 10 பழக்கங்கள்!
நீரேற்றம்
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீரேற்றமாக இருங்கள். சரியான நீரேற்றம் செரிமானத்தை ஆதரிக்கிறது, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது.
ஊரோடு ஒத்து வாழ்
வாரத்தில் ஒருமுறையாவது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெளியே செல்லுங்கள். புதிய உறவுகளை உருவாக்கவும், உறவுகளை வலுப்படுத்தவும் இந்த பயணங்கள் உதவும். இது சமூக தொடர்பு என்றும் சொல்லப்படுகிறது. நட்பு உறவுகளை அடிக்கடி சந்திப்பது நம்மை மகிழ்ச்சியாக உணரவைக்கிறது.
வழக்கமான உடல்நல பரிசோதனை
ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான உடல்பரிசோதனை செய்வது நல்லது. உடல்நலப் பாதிப்புகளை வரும் முன் காப்பதே சிறந்தது. நீண்ட ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்நல பரிசோதனைகள் அவசியம்.
உணவு அளவுகளில் கவனம்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப பசி எடுக்கும் போதும் சாப்பிடுங்கள். தினமும் நீங்கள் சாப்பிடும் உணவை கடவுளின் பரிசாக நினைக்கவும். பலருக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதில் சிரமம். அதே போல சாப்பிடும் போது செல்போன் பயன்படுத்தி கவனச்சிறலைத் தடுக்கவும். ஆரோக்கியமான உணவுத்தேர்வு செரிமான பிரச்சினைகளை தவிர்க்கும்.
மது அருந்துவதை தவிர்க்கவும்
மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்கங்களை தவிர்க்கவும். இவை எந்த வகையிலும் உடல்நலனுக்கு உதவாது. இவை இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நீண்ட ஆயுளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
தொடர்ச்சியான கற்றல்
உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் ஈடுபாட்டுடனும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வயதானாலும் நினைவாற்றல் குறையாமல் இருக்க புதிய விஷயங்கள் கற்பதை நிறுத்தவே கூடாது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation