30 நிமிடம் இதை மட்டும் செய்யுங்க; கீழ்முதுகு வலி பறந்து போய்விடும்!

சரிவிகித உணவுகளும், உடல் ஆரோக்கியத்தை முறையாக பின்பற்றினால் மட்டுமே முதுகுவலிக்குத் தீர்வு காண முடியும்.

walking is the good exercise for back pain

உலகெங்கிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று முதுகுவலி. நடக்கவும் முடியாமல்,உட்காரவும் முடியாமல் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் முதுகுவலி ஏற்படுவதற்கானக் காரணங்கள்? அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

remedies for lower back pain

முதுகு வலி ஏற்படக்காரணங்கள்:

முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசை நாண்கள் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளாலும் பலர் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். ஒரு சிலருக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதீத வலியை உணர்வார்கள். இதோடு மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் முதுகு வலிக்கு ஒரு காரணமாக அமைகிறது.

இன்றைக்கு பல மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே கணினி முன்னதாக அமர்ந்துப் பணியாற்றுவதால், முதுகெலும்புப் பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலியை உணர நேரிடும். இந்த பிரச்சனையையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும் எனவும் மேலும் முதுகு தண்டுவட பகுதிகளை வலுவாக்கும் யோகா,உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழ்முதுகுவலியும் ஆய்வும்:

தற்போது பலரும் முதுகுவலியால் அவதிப்படக்கூடிய சூழலில், இதை சரிசெய்வதற்கு என்ன செய்யலாம்? என்பது குறித்து சமீபத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. லான்செட் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய 701 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிலர் எவ்வித உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் சாதாரண வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.ஒரு சிலர் முதுகு தசைகளை வலுப்பெறவும் சில பயிற்சிகளை செய்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டதாக ஆய்வுகள் கூறுகிறது. மற்ற இரு பிரிவினரை விட 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு முதுகின் அழுத்தம் குறைந்து கீழ் முதுகுவலியைக் குறைத்தாகவும் கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் சரிவிகித உணவுகளும், உடல் ஆரோக்கியத்தை முறையாக பின்பற்றினால் மட்டுமே முதுகுவலிக்குத் தீர்வு காண முடியும். உங்களுக்கு எப்போது முதுகுவலி ஏற்படும்? அதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்தும் இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:வாய் துர்நாற்றத்தைப் போக்க இந்த சமையல் அறை பொருட்கள் போதும்!

causes of lower pain

முதுகுவலிக்கான அறிகுறிகள்:

கொஞ்ச தூரம் நடந்து சென்றால் கூட உடல் சோர்வு, கீழ்முதுகில் குத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கீழே குணிந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்தால் கூட லேசான வலியும், தசைப்பிடிப்பு, உணர்வின்மை போன்றவையெல்லாம் முதுகுவலியின் அறிகுறிகளாக உள்ளன. இதுப்போன்ற அறிகுறிகளை நீங்கள் உணரும் பட்சத்தில் உடனடியாக அதற்குரிய சிகிச்சைகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source - google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP