வல்வோடினியா என்பது ஒரு பெண் தனது பிறப்புறுப்பை சுற்றி அனுபவிக்கும் கொடூர வலியாகும். இதுபோன்ற அசவுகரியத்தை அனுபவிக்கும் பெண்ணாக நீங்கள் இருந்தால் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். இதற்கு நீங்கள் வீட்டில் சிகிச்சை பெற முடியாது, ஆனால் சில உடற்பயிற்சிகள் செய்வது பலன் தரலாம்.
அந்தரங்கம் அல்லது பிறப்புறுப்பு பகுதியை சௌகரியமாக வைத்துக் கொள்வது என்பது எதிலும் சமரசம் செய்ய விரும்பாத பேரின்பமாகும். கோடைகாலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதாலும் வியர்வை உண்டாவதாலும் அரிப்பு ஏற்படும். ஆனால் குளிர்காலத்தின் போது அது அடுக்குகளாக தோன்றி எரிச்சல் ஏற்படலாம்.
இவை அனைத்தும் பொறுத்துக் கொள்ளக்கூடியது என்றாலும், அப்போது ஏற்படும் வலி அதன் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. இதனால் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியமாகிறது. உங்கள் பிறப்புறுப்பில் தொடர்ந்து வலியை அனுபவிக்குமேயானால் அது வல்வோடினியாவின் விளைவாக இருக்கலாம். இதுகுறித்து நாங்கள் பெண்கள் நல மருத்துவர் நிதி கேராவுடன் நடத்திய கலந்துரையாடலை உங்களுக்காகப் பதிவிடுகிறோம்.
புத்தகங்களில் இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கம் என்னவென்றால் பிறப்புறுப்பின் திறப்பு பகுதியில் ஏற்படும் தொடர் வலியும், அசவுகரியமும் என்பதே வல்வோடினியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் சில பெண்களுக்கு பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்படும். மற்றவர்களுக்கு எரிச்சல் மற்றும் எரியும் உணர்வை அனுபவிக்க நேரிடும்.
இப்பிரச்சனை பெண்களின் அன்றாட வாழ்க்கையை கடினமாக்கி விடுகிறது. பாதிப்புக்குள்ளான நபர் நீண்ட நேரம் உட்கார முடியாது அல்லது உடலுறவு கொள்ள இயலாது. இப்பிரச்சனையை எப்படி வெளிப்படுத்துவது என பெண்கள் பலருக்கு தெரிவதில்லை என மருத்துவர் நிதி கேரா நம்மிடம் தெரிவித்தார். மேலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு பெண்களை அதுகுறித்து பேசுவதை தடுப்பதாகவும் குறிப்பிட்டார். வல்வோடினியா பிரச்சனை அதுவாகவே தீர்ந்துவிடுமா எனக் கேட்டபோது... இது அனைத்து வயது பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனை எனவும் தானாகவே சரியாகி விடாது எனவும் மருத்துவர் கேரா தெரிவித்தார். இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பெண் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும்.
வல்வோடினியாவின் அறிகுறிகள் என்ன?
இந்த நிலையில் பெண்ணின் பிறப்புறுப்பு இயல்பாகவே தோற்றமளிக்கும். ஆனால் நீண்ட நாட்களாக அவர் ஒரு வலியை அனுபவித்துக் கொண்டே இருப்பார். இதைத்தொடர்ந்து பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி எரியும் உணர்வு, வலி மற்றும் துடித்தல் ஆகியவற்றை உணரலாம். இந்த அறிகுறிகள் குறைந்த தீவிரத்துடன் இருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட நபர் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கலாம்.
இந்த பாதிப்பில் இருக்கும் போது ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொள்ள முயன்றாலோ அல்லது மாதவிடாயின் போது டாம்பூன்ஸ் பயன்படுத்தினாலோ, அங்கு தொடுவது கடுமையான விளைவுகளை உண்டாக்கி விடும்.
வல்வோடினியாவால் ஏற்படும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் அது நரம்பு பாதிப்பாகும். பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை போன்ற தருணங்களில் இது ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இது ஒரு தொற்று அல்ல.
இது தீவிரமான பாதிப்பு இல்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இப்பிரச்சினை உங்கள் வாழ்க்கை தரத்தை பாதிக்கலாம் என மருத்துவர் கூறுவார். உடலில் லிபிடோவை குறைப்பது, உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி சுயமரியாதை, நம்பிக்கை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிங்கSex Hygiene - மகளிர் கவனத்திற்கு… உடலுறவுக்கு பிந்தைய சுகாதாரம்!
வல்வோடினியா ஏற்பட்டிருக்கக் கூடிய பிற காரணங்கள் :
1. ஒவ்வாமை அல்லது சோப்புகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தாக்கம், குமிழி குளியல் அல்லது பிறப்புறுப்பை கழுவுதல் மற்றும் கிரீம்கள் பயன்படுத்துதல்
2. மீண்டும் மீண்டும் ஏற்படும் ஹெர்பஸ் தொற்று
3. பிறப்புறுப்பில் தொற்று
4. பெஹ்செட்ஸ் நோய், அதாவது ரத்தக் கோளாறினால் பிறப்புறுப்பில் அல்சர் பாதிப்பு
5. லிச்சென் ஸ்க்லரோசஸ் அல்லது லிச்சென் பிளானஸ் என்பது ஒரு தோல் நிலை, அதனால் பிறப்புறுப்பில் புண் அல்லது கடுமையான எரிச்சல் ஏற்படும்.
6. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சற்று சரிந்து பிறப்புறுப்பில் வறண்ட நிலை உண்டாகும்
7. சோகிரென் நோயினால், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்பட்டு பிறப்புறுப்பில் வறண்ட நிலை உண்டாகும்
மேலும் படிங்கபெண்களே உஷார்! சரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்
வல்வோடினியாவை கண்டறிவது எப்படி ?
- பாதிப்பு நிலையைக் கண்டறிய க்யூ டிப் அல்லது பிறப்புறுப்பில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்படும். மேலும் சிலவற்றை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம்.
- பிறப்புறுப்பை சுற்றி காற்றோட்டமான ஆடைகளை அணிந்து கொள்ளலாம்
- பிறப்புறுப்பை சுற்றி வாசனை திரவம் பயன்படுத்துதலை தவிர்த்தல்
- இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்
- பிறப்புறுப்பை சுற்றி ஐஸ் பேக் அல்லது ஜெல் பேக் பயன்படுத்துதல்
- தளர்வான பேண்ட் மற்றும் ட்ரவுசர்களை அணிவது.
மேலும் பாதிப்புக்குள்ளான நபர் மருத்துவரை அணுகினால் பாதிப்பிற்கான காரணத்தை மருத்துவர் சரியாகக் கண்டறிந்து விடுவார் என மருத்துவர் கேரா தெரிவித்தார். இப்பிரச்சனைக்கு மயக்க மருந்துகள், லூப்ரிகண்டுகளை பயன்படுத்தி சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம்.
வாய் வழியாக உட்கொள்ளக்கூடிய மருந்துகளும் இப்பிரச்சனைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். வலி அதிகமாக இருக்கும் போது நீங்கள் பாராசிட்டமால் போன்ற சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டால் அது பலன் அளிக்காது. இப்பிரச்சனைக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி பல மாதங்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கலாம். வலி மிகவும் கொடூரமானதாக இருந்தால் மருந்தினை ஊசியைக் கொண்டு பாதிப்பிற்குள்ளான பகுதியில் நேரடியாகச் செலுத்த வாய்ப்புண்டு.
பெல்விக் ப்ளோர் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பிறப்புறுப்பை சுற்றி உள்ள தசைகளைத் தளர்வுபடுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் சில நோயாளிகள் அவர்களது வாழ்க்கைத் துணையோடு உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதனால் உங்களது தாம்பத்திய பிரச்சனையில் தீர்வு கிடைக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation