herzindagi
image

Grey hair home remedy: இளநரை பிரச்சனை இனி இல்லை; இரசாயனம் இல்லாத வீட்டு வைத்திய முறையில் தீர்வு

Grey hair home remedy: இளநரை பாதிப்பு என்பது இப்போது பலருக்கும் இருக்கிறது. இதற்கான தீர்வு என்னவென்று இளம் தலைமுறையினர் பலரும் குழப்பம் அடைகின்றனர். இதற்காக பல வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
Editorial
Updated:- 2025-09-20, 12:37 IST

Grey hair home remedy: நரை முடியை மறைக்க அடிக்கடி மருதாணி அல்லது இரசாயன அடிப்படையிலான ஹேர் டை பயன்படுத்தி களைத்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் தலைமுடிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல், முடியின் இயற்கையான கருப்பு நிறத்தை மீட்டெடுக்க உதவும் ஒரு இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழிமுறை உள்ளது. இது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பழைய வீட்டு வைத்தியம் ஆகும்.

மேலும் படிக்க: இதை மட்டும் பின்பற்றினால் போதும்... சமந்தாவின் ஸ்கின் கேர் டிப்ஸ்

 

இளநரைக்கு இயற்கையான தீர்வு:

 

இளநரை வருவது பலருக்கும் ஒரு மன உளைச்சலை கொடுக்கும். அதை மறைக்க, பலர் அதிக விலை கொடுத்து ஹேர் டை அல்லது ஹேர் கலர் தயாரிப்புகளை நாடுகின்றனர். ஆனால், இந்த இரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகள் பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால், உச்சந்தலையில் எரிச்சல், முடி சேதமடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சில சமயங்களில், இந்த இரசாயன பொருட்கள் நரை மேலும் அதிகரிக்கவும் காரணமாகலாம்.

Grey hair issue

 

வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு ஒரு தீர்வை தேடுபவர்களுக்கு, எளிதாக கிடைக்கும் சில மூலிகைகள் இதற்கு உதவும். அதன்படி, கொன்றை மரப்பட்டைகளை இதற்கு பயன்படுத்தலாம். இது நல்ல தீர்வை கொடுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க

 

தயார் செய்யும் முறை:

 

ஒரு சிறிய கொன்றை மரத்துண்டை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில், அதே தண்ணீரில் சிறிது வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவும். இது கொதித்த பிறகு, அந்தக் கலவையை ஒரு சுத்தமான துணியால் வடிகட்டி, ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

Grey hair problem

 

இந்த திரவத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். நீங்கள் விரும்பினால், ஒரு பகுதியில் சிறிதளவு ஷாம்பு சேர்த்துக்கொள்ளலாம். முதலில், ஷாம்பு சேர்க்காத மூலிகை நீரை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் மெதுவாக தேய்க்கவும். அதை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் ஷாம்பு கலந்த தண்ணீரைப் பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும்.

 

இந்த இரண்டு பராமரிப்பு முறையும் மிக எளிதாக இருப்பதால் எல்லோராகும் சுலபமாக செய்ய முடியும். மேலும், இதில் இரசாயனங்கள் சேர்க்காததால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற தயக்கும் கிடையாது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் நரை முடியை கருமையாக மாற்ற முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com