உடலுறவு கொள்வது மகிழ்ச்சியையும் சுகத்தையும் கொடுத்தாலும் அதற்குப் பிந்தைய சுகாதாரத்தை பேணுவது மிகவும் அவசியமாகும். உடலுறவு கொண்டபோது ஒருவரது உடலில் இருந்து மற்றொருவருக்கு கிருமிகள் கடந்திருக்கும் என்பதால் நோய்கள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சௌகரியமான ஆடைகள்
உடலுறவுக்கு பிறகு பெண்கள் சௌகரியமான ஆடைகளை அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். உடலுறவு கொள்வது ஒரு தீவிரமான செயல்பாடு என்பதால், அதன் பிறகு பருத்தி மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணிவது அவசியமாகிறது.
கைகளை கழுவுதல்
உடலுறவு கொண்ட பிறகு முதலாவதாக கைகளை நன்கு கழுவு வேண்டும். உடலுறவின் போது இருவரும் பிறப்புறுப்புகளை தொட்டிருக்கும் பட்சத்தில் கிருமிகள் கைகளில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால் கைகளை சோப் போட்டு நன்கு கழுவ வேண்டும்.
மேலும் படிங்க பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எப்போது உடலுறவில் ஈடுபடலாம்?
தண்ணீர் அருந்துதல்
உடலுறவு கொள்வதினால் உடல் சோர்ந்து வறட்சியாகத் தோன்றலாம். அதன் காரணமாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்.
உடலை சுத்தப்படுத்துதல்
உடலுறவு கொண்ட பிறகு உடலை சுத்தப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமானது. இதற்காகக் குளியல் போட்டு பிறப்புறுப்பு, கைகள் மற்றும் முகத்தினை சுத்தப்படுத்த வேண்டும்.
மேலும் படிங்ககர்ப்பகால இரத்தசோகை தடுக்க எளிமையான வழிகள்
சிறுநீர் கழித்தல்
உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது மிகவும் முக்கியமானதாகும். அப்படி செய்வதினால் உடலுறவு கொண்டபோது ஒருவர் உடலில் இருந்து மற்றவருக்கு கடந்த கிருமிகள் அகற்றப்படுகின்றன.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation