
சரும பிரச்சனைகளை சரி செய்வது முதல் பொடுகை தடுப்பது வரை, முடி உதிர்வு பிரச்சனைகளை கையாள்வதற்கு வெந்தயம் உங்களுக்கு பெரிதும் உதவும். கூந்தல் வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் அறிய விரும்பினால், இந்தக் கட்டுரை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் முடி உதிர்வு பிரச்சனை வயது பேதமின்றி பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக, இளம் வயதினரிடம் முடி உதிர்வு அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கு இயற்கையான வழியை பின்பற்ற வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். அவர்களுக்கு வெந்தயம் சரியான தீர்வாக இருக்கும்.
மேலும் படிக்க: பெண்களிடையே அதிகரிக்கும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள்; முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
முடி உதிர்வு பிரச்சனைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதில் பொடுகு தொல்லை முதன்மையானதாக இருக்கிறது. பொடுகு பிரச்சனையை கட்டுப்படுத்தினால் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்வு குறையத் தொடங்கும். இதற்கு வெந்தயம் ஹேர்பேக் உதவியாக இருக்கிறது.

இதற்காக மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில், இந்த வெந்தயத்தை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ஹேர்பேக்கை உச்சந்தலையில் தேய்த்து விட்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ பயன்படுத்தி குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெற பீட்ரூட் ஐஸ் கட்டிகளை இப்படி பயன்படுத்தவும்
இது தவிர ஹோம்மேட் வெந்தயம் ஹேர் சீரமும் தயாரித்து பயன்படுத்தலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் வெந்தயத்தை நன்கு ஊற வைக்க வேண்டும். இந்தக் கலவை ஒரு இரவு முழுவதும் ஊறிய பின்னர், அதன் தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதனை தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக தலையில் தேய்க்கலாம். வெந்தயம், புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வது, அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகின்றன.

இந்த இரண்டு எளிய முறைகளும் உங்கள் கூந்தலை வலுவாக்கி, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து பின்பற்றுவது முடி உதிர்வை குறைக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com