வெப்பநிலை உயர்கிறது - ஃபுட் பாய்சனை தவிர்க்க இந்த 8 முக்கிய குறிப்புகளை நம்புங்கள்!

கோடை காலத்தில் உணவு நச்சுத்தன்மையால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் வரும். ஃபுட் பாய்சனை எப்படி முற்றிலும் தவிர்ப்பது என்பது குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 
danger food poison

மனித உடலின் மிகவும் பொதுவான சுகாதார நிலைகளில் ஒன்று உணவு விஷம். நீங்கள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அது எவ்வளவு மோசமானது என்பதை நீங்களே அறிவீர்கள். வெப்பநிலை உயர்வு காரணமாக தேவையற்ற உடல்நல கேடுகளை தடுக்க உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஏனென்றால் தற்போது வீசும் காற்றில் கூட கெட்ட பாக்டீரியாக்கள் பரவும் நேரம் இது. கோடை காலங்களில் உணவு நச்சுத்தன்மைக்கு அதீத வெப்பம் மிக முக்கியமான காரணம். காலையில் சூடாக சமைக்கும் உணவு மதிய வேலைகளில் கெட்டுப் போகும் அளவிற்கு சூரிய வெப்பம் அதிகமாக பரவி வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு பாக்டீரியாவை பெருக்குவதற்கு அனுமதிக்கிறது. இது ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இது பல வழிகளில் தடுக்கப்படும்.

food poisoning

உணவு விஷம் என்றால் என்ன?

உணவு நச்சு என்பதே உணவினால் பரவும் நோய்களில் ஒன்றாகும். இது அசுத்தமான கெட்டுப்போன அல்லது நச்சுத்தன்மை உள்ள உணவை சரியாக கவனிக்காமல் சாப்பிடுவதன் விளைவாகும். உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அழிவு ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் வெப்பத்தில் அதிகம் பரவும் அது உணவுகளில் கூட பரவும் வாய்ப்பு உள்ளது. அதிக வெப்பத்தால் உணவு கெட்டுப் போய் விஷமாக மாறும்போது நமக்கு குமட்டல்,வாந்தி,நீர் அல்லது ரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு,வயிற்று வலி, காய்ச்சல் ஆகியவை வரும் இந்த அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

உணவு நச்சுத்தன்மையை தவிர்க்க முக்கிய குறிப்புகள்

சுத்தமான பாத்திரங்களை பயன்படுத்துங்கள்

எப்போதும் உணவினால் பரவும் நோய் அசுத்தமான உணவால் வருகிறது என்று அர்த்தமல்ல. உங்களின் அசுத்தமான பாத்திரங்களால் கூட உணவு விஷம் தூண்டப்படும். உங்கள் சமையலறை எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் உங்கள் பாத்திரங்களில் பாக்டீரியாக்கள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே நோய்வாய் படாமல் உங்களை காப்பாற்றிக் கொள்ள பாத்திரங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவு பாத்திரங்களை கழுவி சிறிது நேரம் வெயிலில் உலர விட்டு பயன்படுத்துங்கள்.

புதிய உணவுகளை உண்ணுங்கள்

அதிகப்படியான வெப்பநிலை உங்கள் உணவுகளை எளிதில் மாசுபடுத்தி உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். குளிர்சாதன பெட்டிகளில் உணவுகளை சேமித்து நீங்கள் உண்ணும் போது பாக்டீரியா பரவாது என்பது அர்த்தம் அல்ல. எனவே எப்போதும் சமைத்து புதிய உணவை சாப்பிடுங்கள். தேவைக்கேற்ப புதிதாக சமைத்து உண்ணுங்கள். வெயில் காலங்களில் குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைத்து மீண்டும் சூடு படுத்தி உண்ணுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

உணவுகளை நன்கு சமைக்கவும்

சமைத்த உணவு பாக்டீரியாவை கொல்லும். அளவுக்கு அதிகமான உள் வெப்ப நிலையில் சூடுபடுத்தப்பட்ட பின்னரே பாதுகாப்பான உணவு தயாராகும். எனவே உணவுகளை நன்கு சமைக்கவும் குறிப்பாக அசைவ உணவுகளான கோழி முட்டை இறைச்சி ஆகியவற்றை நல்ல வெப்ப நிலையில் சமைத்து உண்ணவும். முடிந்த அளவு உணவு வெப்பமானியை பயன்படுத்தி சரிபார்த்து உண்ணவும். புதிதாக சமைத்த உணவை இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெளியே வைத்திருக்க வேண்டாம். முடிந்த அளவு வெப்பநிலையில் வைத்து சேமிக்கவும்.

இறைச்சிகள் கவனிப்பு

வீட்டிற்கு இறைச்சி வாங்கி வரும்போது சமையலறையில் வைத்து அந்த இறைச்சிகளை கழுவ வேண்டாம். வேறு இடத்தில் கழுவி குளிர்சாதனப்பட்டியில் சேமித்து வைத்துவிட்டு மீண்டும் அதை எடுத்து சரியாக கழுவி பயன்படுத்தவும். இதனால் உணவில் பரவும் தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளை நம்மால் தடுக்க முடியும்.

பச்சை காய்கறிகளை தவிர்க்கவும்

விதைகள் பச்சை காய்கறிகளை சமைக்காமல் உண்பதை வெப்ப காலத்தில் குறைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் விதைகள், காய்கறி பச்சை விதைகளில் பாக்டீரியாக்கள் எளிதில் பரவும். முடிந்த அளவு வெப்ப காலத்தில் பச்சை காய்கறிகள் விதைகளை உணவாக சமைத்து அதாவது வதக்கி உண்ணவும்.

பாத்திரங்கள் கழுவும் கருவிகளை மாற்றவும்

உங்கள் டிஸ் பஞ்சுகள் மற்றும் டிஷ் துணிகளை அடிக்கடி மாற்றவும். இவை உங்கள் வயிற்றில் பாக்டீரியாவின் மிகப்பெரிய கேடுகளாக இருக்கலாம். அதேபோல் 60 சதவீத பாத்திரங்களில் ஈகோலி போன்ற கொடிய பாக்டீரியாக்கள் உள்ளது ஆய்வுகளில் வெளிவந்துள்ளது .

பச்சை சாலடுகள் பழங்களை தவிர்க்கவும்

பச்சை சாலடுகள் அல்லது பலன்களை வெயில் காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.குறிப்பாக வெளியில் இருந்து அவை பாக்டீரியா வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. எப்போதும் பழங்களை நன்று கழுவி புதிய கிண்ணத்தில் வைத்து சாப்பிடவும்.

மேலும் படிங்க:தினமும் ஏன் பீட்ரூட், கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்!

இந்த அடிப்படை முக்கிய குறிப்புகள் தவிர உடல்நிலை சரியில்லாமல் உங்களை காப்பாற்ற சுகாதாரத்தை எப்போதும் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுகாதாரமான சூழல் பல நோய்களை தடுக்க உதவும் உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் மற்றும் ஆரோக்கியமான மகிழ்ச்சியான கோடை காலத்தை உறுதி செய்யுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP