சிறுநீரகக் கற்கள் வந்தால் மிகவும் வேதனையான இருக்கும் இந்த கல் சோடியம் மற்றும் தாதுக்கள் குவிவதால் உருவாகிறது. கற்களின் அளவு நபருக்கு நபர் மாறுபடும். சில மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் மூலம் சிறிய கற்களை அகற்றலாம். ஆனால் பெரிய கற்கள் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும். அத்தகைய சூழ்நிலையில் சிகிச்சையை விட எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. சில நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை தவிர்க்கலாம். அந்த ஆரோக்கியமான பழக்கங்கள் என்னவென்று பார்ப்போம்.
மேலும் படிக்க: சருமம் பளபளப்பாக இருக்க இந்த ஊதா நிற பழங்கள், காய்கறிகளை தினமும் சாப்பிடுங்கள்
சிறுநீரக கற்கள் வராமல் இருக்க தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் சேரும் நச்சுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன இது சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது. நாள் முழுவதும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். நீங்கள் வெரும் நீராக குடிக்க பிடிக்கவில்லை என்றால் எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். இவை இரண்டிலும் சிட்ரேட் உள்ளதால் கல் உருவாவதை தடுக்கும்.
அதிகப்படியான உப்பு அல்லது அதிக உப்புகள் இருக்கும் உணவுகள் சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுநீரில் உள்ள அதிகப்படியான உப்பு அது கால்சியமாக மாறி சிறுநீரில் இருந்து இரத்தத்தில் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. அதனால் சிறுநீரில் வெளியேறும் போது அதிக அளவு கால்சியம் வெளியே செல்கிறது இதனால் சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும்.
சில சிறுநீரக கற்கள் ஆக்சலேட்டால் ஆனவை.எனவே இது சிறுநீரக கற்களை உருவாக்கும் உணவுகளில் காணப்படும் ஒரு இயற்கை கலவை. அத்தகைய சூழ்நிலையில் கீரைகள், காபி, வேர்க்கடலை, சாக்லேட் மற்றும் தக்காளி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். இது கல் உருவாவதைத் தடுக்க உதவும்.
இறைச்சி அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். கோழி, பன்றி இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளையும் உள்ளடக்கியது. நீங்கள் ஒரு சைவ உணவு பிரியர்களாக மாற வேண்டிய அவசியமில்லை உங்கள் இறைச்சி நுகர்வு குறைக்க வேண்டும்.
மேலும் படிக்க: இரவில் குளித்தால் அதன் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit:Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com