
நம்முடைய உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க சில விஷயங்களைக் கட்டாயம் உங்களது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற பருவ காலங்களைக் காட்டிலும் குளிர்காலங்களில் எந்த வேலையையும் முறையாக செய்ய முடியாது. ஆனாலும் நாள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும் என்றால், கட்டாயம் சில பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.
நாள் முழுவதும் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். குளிர்ந்த சூழலில் தண்ணீர் அருந்துவதே சிலருக்கு பிடிக்காத ஒன்று. குடிக்கவும் மாட்டோம். ஆனால் உடல் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்றால் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தலைவலி, உடல் சோர்வை அனுபவிக்க நேரிடும்.
காலை எழுந்ததும் உடல் சோர்வின்றி இருக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சிகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். உங்களால் அதிக உடற்செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லையென்றால், லேசான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளவும். யோகா, ஜம்பிங், நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதீத குளிர் இருக்கும் பட்சத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: Benefits of Black Pepper: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மிளகு; எப்படி தெரியுமா?
மேலும் படிக்க: Morning Routine: குளிர்காலத்தில் குடல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பழக்கங்களை காலை நேரத்தில் பின்பற்றவும்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com