herzindagi
image

குளிர்ந்த காற்றால் காதுவலியால் அவதிப்படுகிறீர்களா? குணப்படுத்த எளிய வைத்தியங்கள் இங்கே!

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே வைரஸ் தொற்றுகளோடு காது வலி பிரச்சனையும் மக்களைப் பாடாய்படுத்தும். என்ன தான் காது மூக்கு தொண்டை மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொண்டாலும் சில அடிப்படையான விஷயங்களையும் வீட்டு வைத்தியங்களையும் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-02, 23:11 IST


தமிழகத்தைப் பொறுத்தவரை மார்கழி, தை, மாசி மாதங்களில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். உடல் நல பாதிப்புகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும் குளிர்ந்த காற்றால் காது வலி பிரச்சனையையும் மக்கள் அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. குழந்தைகள் மற்றும் 40 வயதிற்கு மேலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகளவில் குளிர்ந்த காற்றால் காதுவலி ஏற்படுகிறது. குளிர்ந்த காற்றால் ஏன் காதுவலி ஏற்படுகிறது? இதற்கு என்னென்ன எளிய வைத்திய முறைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

குளிர்காலத்தில் காதுவலி ஏற்படக்காரணம்?

குளிர்ந்த காற்றால் காதுவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது யூஸ்டேஷியன் எனப்படும் குழாய். இது தான் நமது மூக்கையும் காதையும் இணைக்கிறது. குளிர்காலத்தில் அதிகளவிலான காற்று மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் போது, வறண்ட காற்றின் காரணமாக இந்த குழாய் மூடிக்கொள்கிறது. காற்று செல்ல முடியுமால் மூடிக்கொள்வதால் காது சவ்வுகள் இழுக்கப்பட்டு வல அதிகமாக ஏற்படுகிறது. இதோடு மட்டுமின்றி உடலின் மற்ற பாகங்களில் இருப்பதைப் போன்று வெளிப்புற காதுகளில் கொழுப்பு கிடையாது. குளிர்ந்த காற்று செல்லும் போது காதுகளில் வலி ஏற்படுகிறது. அதிகளவில் சளி, தொண்டை கரகரப்பு, சைனஸ் தொற்று பாதிப்புகள் இருக்கும் போது காதுவலி அதிகளவில் ஏற்படுகிறது.

மேலும் படிக்க: மூளைக்கு வேலை கொடுங்க; ஞாபக சக்தி மற்றும் கவனத்தை அதிகரிக்கும் 5 சூப்பர் வழிகள்!

காதுவலியைக் குணமாக்கும் எளிய வைத்தியம்:

  • குளிர்ந்த காற்றால் ஏற்படக்கூடிய காதுவலியை சரிசெய்ய வேண்டும் என்றால் சில அடிப்படை விஷயங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதீத குளிர் இருக்கும் மாதங்களில் எப்போது வெளியில் சென்றாலும் குல்லா அணிந்து செல்வது நல்லது. வறண்ட காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க முடியும். இதனால் காது வலி அதிகளவில் இருக்காது.
  • காதுகளையும், மூக்கையும் சேர்த்து மூடிக்கொள்ளும் ஸ்கார்ப் அணிவது நல்லது.
  • குளிர்ந்த காலத்தில் எப்போது வெளியில் சென்று வீடு திரும்பியதும் ஆவி பிடிப்பது நல்லது. வெதுவெதுப்பான காற்று மூக்கினுள் செல்லும் போது வலிக்கு நிவாரணமாக அமைகிறது. வாரத்திற்கு இருமுறை கட்டாயம் ஆவி பிடிக்க வேண்டும்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

 

 

  • குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க வேண்டும் என்றால், உப்பை சூடாக்கி காட்டன் துணியில் கட்டி காதுக்கு வெளிப்புறத்தில் ஒத்தனம் கொடுப்பது நல்லது.
  • குழந்தைகளுக்கு ஒத்தனம் கொடுக்கிறீர்கள் என்றால் உயரமாக படுக்க வைத்து லேசாக ஒத்தனம் வைக்க வேண்டும்.
  • நல்லெண்ணெய் லேசாக சூடாக்கிக் கொள்ளவும். இளஞ்சூட்டில் காதில் ஒரு சொட்டு விடும் போது காதில் உள்ள ஈரப்பதம் குறையும். காது சவ்வுகளில் வலி ஏற்படாது.
  • ஒருவேளை இதுபோன்ற விஷயங்களை மேற்கொண்ட பின்னதாக தொடர்ந்து வலி ஏற்படும் பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com