
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் மக்கள் அதீத குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். வறண்ட காற்று சருமத்திற்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உதடுகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வெயில் காலங்களை விட குளிர்காலத்தில் குறைந்த அளவில் தண்ணீர் குடிக்கும் போது உடல் சோர்வடைகிறது. நீர்ச்சத்துக்களும் குறைவாக இருப்பதால் சருமம் அடிக்கடி வறண்டு விடப்போகும். அதீத குளிரால் சில சமயங்களில் உதடுகளிலும் வெடிப்புளும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க இனி கடைகளுக்குச் சென்று லிப் பாம் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிமையான முறையில் லிப் பாம்களைத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.
உதடுகளை ஈரப்பதமூட்டும் லிப் பாம்களை எளிமையான முறையில் லிப் பாம்கள் தயாரிக்கும் முறைகள்.
இளஞ்சிவப்பு உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி சயெ்ய வேண்டும் என்றால், வீட்டில் எளிய முறையில் தயாரிக்கப்படும் ரோஸ் லிப் பாம் சரியான தேர்வாக அமையும். இதை செய்வதற்கு முதலில் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய், உலர்ந்த ரோஜா இதழ்கள், அத்தியாவசிய எண்ணெய் போன்றவற்றைத் தயார் நிலையில் எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி உருக்கிக் கொள்ளவும். இதனுடன் சூடு ஆறியதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் போதும் லிப்பாம் ரெடி. உதடு வெடிப்புகள் இருக்கும் இடத்தில் தடவினால் போதும் சீக்கிரமே சரியாகிவிடும்.
மேலும் படிக்க: பளபளப்பான சருமத்திற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 இயற்கை குறிப்புகள்
குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய உதடு வெடிப்புகளைச் சரி செய்ய ஆரஞ்சு லிப் பாம் செய்யலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு உருக்கிக் கொள்ளவும். பின்னர் இதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் ஆரஞ்சு தோல் சேர்த்து அவை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். ஆரஞ்சில் உள்ள எசென்ஸ்கள் இறங்கும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் சூடு ஆறியதும் ஒரு கொள்கலனில் சேகரித்து வைத்தால் போதும். எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத லிப் பாம்களை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 அற்புத உணவுகள்; முடி உதிர்வு பிரச்சனைக்கு எளிய தீர்வு
இதுபோன்று சோற்றுக்கற்றாழை வைத்தும் லிப்பாம் தயார் செய்ய முடியும். வறண்ட காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்யும் என்றாலும் இதை மட்டும் பயன்படுத்துவது தவறான செயல். இந்த லிப் பாம்களைத் தயார் செய்து உபயோகிப்பதோடு உடலை நீரேற்றத்துடன் வைக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் அருந்துதல், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com