தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என்றும், வருகின்ற இரண்டு தினங்களுக்கு வழக்கத்தை விட 2-3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள வெயிலின் தாக்கத்தையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத சூழலில் இயல்பை விட வெயில் வாட்டி வதைக்கும் என்ற அறிவிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடை வெயில் வெப்பத்தை அதிகளவில் வெளியிடுவதோடு, உடல் நலப் பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தும். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
வெயிலை சமாளிக்கும் டிப்ஸ்கள்:
நீரேற்றமாக இருத்தல்:
கோடை வெப்பத்தால் அதிகளவு வியர்வை வெளியேறுவதோடு உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை அதிகளவில் வெளியேற்றுகிறது. இதனால் காய்ச்சல், உடல் சோர்வு, அசௌகரியம் போன்ற பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். எனவே உடலை நீரேற்றமாக வைத்திருக்க நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
காட்டன் ஆடைகள் அணிதல்:
உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், காட்டன் ஆடைகளை கோடை காலத்தில் அதிகளவு பயன்படுத்த வேண்டும். இது உடலின் வியர்வை உறிஞ்சுகிறது. மேலும் வெயிலினால் ஏற்படக்கூடிய தோல் எரிச்சல், அலர்ஜி போன்ற பாதிப்புகளைத் தடுக்கிறது.
வெளியில் செல்வதைத் தவிர்த்தல்:
வெயில் காலத்தில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் மதியம் 12 மணிக்குள் வெளியில் உள்ள வேலைகளை முடித்துவிட வேண்டும். வெயில் நேரத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு வேலையாக இருந்தாலும் மாலை 5 மணிக்குப்பிறகு செய்வது நல்லது.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்:
வெயில் காலத்தில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உடலில் அதிகளவு வெப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்ப்பது நல்லது. இதற்கு மாற்றாக ஆரஞ்சு, தக்காளி, தர்பூசணி, மோர் சாதம் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கண்களைப் பாதுகாத்தல்:
வேலைக்கு செல்லும் போது அல்லது கடுமையான சூரிய ஒளியில் வெளியில் செல்லும் போது எப்போதும் உங்களது கண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது, குறைந்தபட்சம் 99 சதவீத புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் சன்கிளாஸ்களை அணியுங்கள்.
ஆல்கஹால் மற்றும் காஃபினைத் தவிர்த்தல்:
ஆல்கஹால், சூடான பானங்கள் மற்றும் காபி அனைத்தும் உங்களது உடலை விரைவாக நீரிழக்க செய்யும். எனவே வெப்பமான காலநிலையில் உங்களது உடல் வெப்பத்தைக் குறைக்க இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation