செக்ஸ் என்பது இன்பம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல நம் உடலுக்கு நல்லதும் கூட. செக்ஸில் ஈடுபடும் போது ஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கும். இதனால் நம்முடைய மனநிலை மேம்படும். இதய ஆரோக்கியம், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைப்பதற்கு செக்ஸ் உதவும். இதில் பலருக்கும் விதவிதமான சந்தேகங்களும், கேள்விகளும் உண்டு. உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக பயணிக்க ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை தேவை. இந்தியாவில் விவாகரத்து பிரச்னைக்கு தம்பதிகளுக்கு இடையேயான செக்ஸ் வாழ்க்கையும் ஒரு காரணமாகும். இதை எளிதான பிரச்னையாக கடந்துவிடாமல் தம்பதிகளுக்கு இடையே புரிதலை ஏற்படுத்தும் விஷயமாகவும் பார்க்கவும்.
செக்ஸ் மற்றும் அதில் ஒருவர் சந்திக்க கூடிய பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கு இணையத்தில் பல தரவுகள் உள்ளன. எனவே இணையத்தில் செக்ஸ் குறித்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். செக்ஸ் விஷயத்தில் நீங்களும் துணையும் எதிர்கொள்ளும் சிக்கல்களை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். இதை நேரடியாக பேசுவதில் சிரமம் இருந்தால் நீங்கள் இணையத்தில் தேடிய விஷயத்தை அவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புங்கள்.
வயது அதிகரிக்கும் போது செக்ஸ் விஷயத்தில் ஆர்வம் குறைய வாய்ப்புண்டு. எனினும் அதை தொடர விரும்பும் போது இருவரும் அமைதியான, செளகரியமான, இடையூறு இல்லாத இடத்தை கண்டறியும். உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் நீங்கள் அறிய வேண்டும். செக்ஸில் இருவரும் முழு உச்சத்தை அடைய நேரம் ஆகலாம்.
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியை சரி செய்ய ஜெல் அல்லது திரவம் பயன்படுத்துங்கள். இதனால் செக்ஸ் செய்யும் போது வலி ஏற்படாது. ஜெல் வேலை செய்யாத பட்சத்தில் மருத்துவரை அணுகவும்.
சோர்வு, கோபம், வெறுப்பு என எதுவாக இருந்தாலும் தினந்தோறும் உங்கள் துணையுடன் முத்தமிடுதல், கட்டி பிடிப்பதை தவிர்க்காதீர்கள். இவை இரண்டும் உடல் ரீதியான உணர்வுகளை தொடர அவசியமாகும்.
செக்ஸ் விஷயத்தில் துணைக்கு ஆழமான புரிதல் இருக்க வேண்டும் என அவசியமில்லை. எவ்வித அழுத்தம் இன்றி செய்வது முக்கியம். இதற்கு உங்கள் துணையிடம் எப்படி தொட்டால் பிடிக்கும் என கேட்டு பழகவும். எந்த அளவுகோலில் செக்ஸ் செய்யலாம் என்ற புரிதலும் உங்களுக்கு ஏற்படும்.
எல்லா நேரமும் ஒரே மாதிரியான செக்ஸ் நிலைகளை முயற்சிக்காதீர்கள். அவ்வளவு தானா என்ற மனநிலை துணைக்கு ஏற்படலாம். உச்சக்கட்டத்தை அடைவதற்கு விதவிதமான முயற்சிகளை எடுக்கலாம்.
மேலும் படிங்க திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்து கொள்வது நல்லதா ? கெட்டதா ? சாதகமும், பாதகமும்
உங்கள் துணையிடம் செக்ஸ் மீது இருக்கும் ஆர்வத்தை எடுத்துரைக்கவும். எந்தெந்த நிலைகளில் செக்ஸ் செய்தால் முழு இன்பத்தை அடையலாம் என கூறுங்கள். உதாரணமாக செக்ஸ் செய்வதை ஒரு படம் போல் விவரிக்கலாம். செக்ஸில் ஆர்வம் குறைவான நபர்களின் உணர்வுகளை தூண்டுவதற்கு இதுவும் ஒரு வழி.
ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு உடற்பயிற்சி செய்வது நல்லது. கெகல் உடற்பயிற்சியின் விளக்கத்தை தெரிந்துகொண்டு இரண்டு இருவரும் தினமும் பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக பெண்ணின் பிறப்புறுப்புக்கு இந்த பயிற்சி நன்மை பயக்கும்.
செக்ஸ் செய்த பிறகு இருவரும் ஓய்வெடுக்க முயற்சிக்கவும். மூச்சு பயிற்சி, யோகா அல்லது வெளியே சென்று மனதை அமைதிப்படுத்துங்கள்.
இது பெண்களுக்கு மிகவும் உபயோகமான சாதனம் ஆகும். உச்சமடைவதற்கு எந்த அளவில் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதை இந்த சாதனத்தை பயன்படுத்தி அறியலாம்.
செக்ஸில் எதுவுமே உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றாலும் மனம் தளராதீர்கள். மருத்துவரிடம் சென்று உங்களுடைய பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com