
திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் செய்ய நினைப்பது தனி மனிதனின் நம்பிக்கை மற்றும் எல்லைக்குள் வரையறுக்கப்படுகிறது. திருமண நாள் வரையில் புனித தன்மையுடன் இருப்பதை பெரும்பாலான மதங்களும், கலாச்சாரங்களும் வலியுறுத்துகின்றன. எனினும் திருமணத்திற்கு முன் செக்ஸ் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்வது சரியா தவறா ? செக்ஸ் செய்தால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். செக்ஸ் செய்வதற்கு திருமணம் வரை காத்திருப்பதும் அல்லது விருப்பத்துடன் செய்வதும் தனிப்பட்ட விஷயமாகும்.
திருமணத்திற்கும் முன்பாக செக்ஸ் கொண்டால் அது உறவில் பல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். செக்ஸ் செய்வது இருவரிடையே நெருக்கத்தை அதிகரிக்கும். அதே நேரம் செக்ஸ் செய்த பிறகு குற்ற உணர்வும் ஏற்படும். இந்த விஷயத்தில் இருவரும் வெளிப்படையாக பேசி உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் தெரிவிப்பது நல்லது.

திருமணம் வரை செக்ஸ் செய்யாமல் காத்திருப்பதில் தவறு கிடையாது. எனினும் செக்ஸ் பற்றி எந்தவித புரிதலும் இன்றி குழந்தைத் தனமாக இருப்பது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்காது. திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்தால் பாலியல் அனுபவம் கிடைக்கும், புரிதலும் உண்டாகும்.
திருமணத்திற்கு பிறகு மகப்பேறு குறித்து சிந்திக்கும் போது செக்ஸ் பற்றிய புரிதல் தேவை. திருமணத்திற்கு முன் செக்ஸ் செய்ய முயற்சித்தால் இருவருக்கும் உள்ள சிக்கல்களை கூட தெரிந்துகொள்ளலாம். திருமணத்திற்கு முன்பாக முயற்சித்தால் செக்ஸ் விஷயத்திலும் உங்களுக்கு ஏற்ற நபரை கண்டறியலாம்.
செக்ஸ் செய்வதற்கு ஒரு விதமான முயற்சி தேவைப்படும். ஆரம்பத்திலேயே அனைத்தையும் செய்ய முடியாது. இதற்கு நேரம் எடுக்கும் எனவும் புரிந்து கொள்ள முடியும். செக்ஸில் ஒருவர் மிக ஆர்வமானவராகவும் மற்றொருவர் இயல்பானவராகவும் இருக்கலாம். திருமணத்திற்கு முன்பு செக்ஸ் செய்தால் ஒருவர் மற்றொருவரின் பாலியல் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
திருமணத்திற்கு முன்பாக துணையுடன் செக்ஸ் செய்வது இருவருக்கிடையே புரிதலை அதிகரிக்கும். விரைவாக திருமணம் செய்யலாம் என்ற எண்ணமும் வரும்.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் செய்தால் உணர்ச்சிகள் எளிதில் வெளிப்படும். செக்ஸ் என்பது உணர்வு ரீதியாகவும் உறவை வலுப்படுத்தும். செக்ஸ் செய்த பிறகு இருவரிடமும் எந்த விஷயத்தை பேசுவதிலும் தடை ஏற்படாது.
செக்ஸ் செய்து கொண்டால் இருவரிடமும் இயல்பாக மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒருவருக்கு ஒருவர் காட்டும் அர்ப்பணிப்பு எளிதில் புரியும். உறவில் முழு அர்ப்பணிப்புடன் பயணிக்கலாம். செக்ஸ் இல்லாத உறவு அதிக சண்டைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருக்காது.
எந்தளவிற்கு துணை உங்கள் மீது ஈர்க்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் செக்ஸ் வைத்து கொண்டால் அறியலாம். செக்ஸ் செய்தால் மன அழுத்தமும் குறையும்.
தாமதமாக திருமணம் செய்வோர் பாலியல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் முயற்சித்தால் பாலியல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னையை கண்டறிந்து அதை சரி செய்யலாம். செக்ஸ் செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மன நலனுக்கும் நல்லது. செக்ஸ் இருவருக்கு இடையில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் செய்வது நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் திருமணத்திற்கு பின் அந்த நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். உறவில் இருவரும் உண்மையாக இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும்.
மேலும் படிங்க Women Sexual Health: பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 4 உணவுகளை சாப்பிட வேண்டும்
திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்தால் இருவரும் செகளரியமாக உணர்ந்துவிடுவீர்கள். ஏற்கெனவே செக்ஸ் செய்துவிட்டதால் திருமணத்திற்கு பிறகு பெரியளவில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். ஒருவரிடம் கிடைக்கும் இன்பம் தீர்ந்துவிட்டால் உறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புண்டு.
திருமணத்திற்கு முன்பே செக்ஸ் செய்தால் கர்ப்பம் தரிக்கும் பிரச்னை ஏற்படலாம். கருக்கலைப்பிற்கு பெரும்பாலான நாடுகள் அதிகாரப்பூர்வ சட்டங்களை இயற்றியுள்ளன. திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்தால் வாழ்க்கையில் இதர விஷயங்கள் பாதிக்கப்படும்.
திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் செய்தால் பாலியல் ரீதியான நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவலாம்.
இளம் வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டால் அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு பிற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அடிக்கடி செக்ஸ் செய்வதை தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.
திருமணத்திற்கு முன் செக்ஸ் முயற்சித்தால் அந்த நபர் உங்களை ஏமாற்றிவிடலாம் என்ற சிந்தனையும் வரும். கழுத்தில் தாலி ஏறும் வரை மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும். அந்த நபர் ஏமாற்றிவிட்டால் மனநலன் நிச்சயம் பாதிக்கப்படும்.
ஆர்வத்தில் செய்யும் இந்த விஷயம் இருவரின் வாழ்க்கையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். இளம் வயதில் பாலியல் விஷயத்தில் புரிதல் இன்றி ஈடுபட்டால் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும். அவசரப்பட்டு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வும் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும். செக்ஸ் விஷயத்தில் சரியான முடிவை எடுத்தீர்களா என கேள்வி உங்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.
செக்ஸ் விஷயத்தில் உங்களை பிடிக்கவில்லை எனக் கூறி துணை விலகிவிட்டால் குழந்தைக்கு ஒற்றை பெற்றோர் நிலை ஏற்படும். திருமணத்திற்கு முன்பு கருக்கலைப்பு செய்வது எளிதான காரியமல்ல.
Image credits : freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com