உணவிற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் மஞ்சளில் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம். மஞ்சள் மற்றும் மிளகு கலவையானது ஆரோக்கியத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை தடுக்கவும் உதவுகின்றன. இக்கலவையானது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக ஊட்டச்சத்து நிபுணரான சுவாதி பத்வால் அவர்கள் தெரிவித்துள்ளார். மஞ்சள் மற்றும் மிளகு கலவையானது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவில் படித்தறியலாம்.
மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஆகையால் மஞ்சள் புற்று நோயையும் எதிர்த்து போராட உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தை குறைக்க உதவும் அற்புத உணவுகள்!
மஞ்சளை போலவே மிளகிலும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள பெப்பரின் எனும் கலவை செரிமானத்தை மேம்படுத்தவும், குமட்டல் போன்ற பிரச்சனைகளை நீக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
மிளகில் உள்ள பெப்பரின் செரிமானத்தை மேம்படுத்தவும், குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது. ஏனெனில் இது குர்குமினில் உள்ள மஞ்சள் போன்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது.
இவை இரண்டையும் தனித்தனியாக பயன்படுத்துவதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவற்றை தனியாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை ஏன் ஒன்றாக பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர் ஸ்வாதி பத்வால் அவர்கள் விளக்கியுள்ளார். மஞ்சளில் உள்ள மிகப்பெரிய குறைபாடு, அதன் சத்துக்கள் உடலில் சரியாக உறிஞ்சப்படாமல் இருப்பதுதான். அதேசமயம் மஞ்சளுடன் கருப்பு மிளகை சேர்த்து பயன்படுத்தும் பொழுது குர்குமின் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும்.
இந்த சக்தி வாய்ந்த கலவை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவியாக இருக்கும். மஞ்சளின் குர்குமின் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பது வரை ஏராளமான நன்மைகளை தரும்.
மஞ்சளை டீ, பால் அல்லது மஞ்சள் நீர் வடிவில் பயன்படுத்தும் போதெல்லாம், அதனுடன் மிளகு தூள் சேர்க்க மறக்காதீர்கள். ஏனெனில் கருப்பு மிளகு இல்லாமல் மஞ்சளில் உள்ள குர்குமினை உடல் உறிஞ்சாது.
குர்குமினில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன, இது புற்றுநோயைத் தடுப்பதில் உதவியாக இருக்கும். புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க இது உதவிகரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் புற்றுநோய் செல்களை அழிப்பதில் பெப்பரின் பங்கு வகிக்கிறது, இது புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைக் குறைக்கும்.
சில ஆய்வுகளின்படி, மஞ்சள் மற்றும் மிளகு கலவையானது புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இரண்டிலும் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடல் அழற்சியைக் குறைத்து சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: ரம்யா பாண்டியனின் அசர வைக்கும் கிரேன் போஸ், இந்த யோகாவில் அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com