Benefits of Beetroot: பீட்ரூட்டில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், அத்தியவாவசிய வைட்டமின்கள் உள்ளதால் எந்த பருவக் காலங்களிலும் சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக உள்ளது.

how to eat beetroot

வாழ்நாள் முழுவதும் எவ்வித நோய் நொடியும் இன்றி வாழ வேண்டும் என்றால் ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நாம் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு காய்கறிகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய அத்துனை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில் இன்றைக்கு பீட்ரூட்டில் உள்ள ஊட்ச்சத்துக்கள் என்ன? என்றும் இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

health benefits of beetroot ()

ஆரோக்கியம் சேர்க்கும் பீட்ரூட்:

தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், அத்தியவாவசிய வைட்டமின்கள் உள்ளதால் எந்த பருவக் காலங்களிலும் சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. பொரியல், ஜூஸ், சாலட் என உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒருபோதும் குறைவதற்கு வாய்ப்பில்லை. இதோ ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இவை தான்.

  • மூளை ஆரோக்கியம்: தினமும் உங்களது உணவு முறையில் காலையில் ஜூஸ் அல்லது சாலட்டாக பீட்ரூட்டை சாப்பிடும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. எவ்வித இடையூறும் இன்றி மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • செரிமானம் மேம்படுதல்: பீட்ரூட்டில் நார்ச்சத்துக்கள் இருப்பதால், நீங்கள் சாப்பிடக்கூடிய உணவை எளிதில் செரிமானம் செய்கிறது. வாரத்தில் இரண்டு நாள்களாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது குடல் இயக்கம் மேம்படுவதோடு மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. மேலும் உடலின் இரத்தம் சீராக இயக்குவதற்கும் உதவியாக உள்ளது.
  • எடை குறைப்பு: இன்றைக்கு நம்மில் பலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என பல உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இருந்தப்போதும் உங்களுடைய உணவு முறையில் தினமும் பீட்ரூட்டை சேர்த்துக் கொண்டால் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் குறைக்க பேருதவியாக உள்ளது. சாலட்டாக சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்ல, பசியை கட்டுப்படுத்த உதவுவதோடு நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
  • கல்லீரல் ஆரோக்கியம்: வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள பீட்ரூட்டை தினமும் சாப்பிடும் போது, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பீடைன் என்ற வேதிப் பொருள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், கல்லீரல் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
beetroot
  • சரும பாதுகாப்பு: தினமும் ஜூஸ், சாலட், பொரியல் என பீட்ரூட்டை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, சருமம் ஆரோக்கியத்துடன் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, போன்ற சத்துக்கள் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் தோலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதோடு முக சுருக்கம் மற்றும் வயதானத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • எலும்புகள் ஆரோக்கியம்: கால்சியம் சத்துக்கள் பீட்ரூட்டில் அதிகளவில் உள்ளதால் நம்முடைய எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியத்தை அளிக்கிறது. வயதானக் காலத்தில் ஏற்படும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தினமும் பீட்ரூட்டை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP