நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் இருந்துள்ளது. இந்த வாழ்க்கை முறையை முறையாக பின்பற்றி வந்ததன் விளைவு தான் 90 வயதிலும் அவர்கள் ஆரோக்கியமுடன் இவர்கள் வாழ்ந்தனர். இவற்றில் ஒன்றாக வெற்றிலை பற்றியும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
வெற்றிலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:
வீடுகளில் நடைபெறக்கூடிய ஒவ்வொரு விசேசங்களிலும் வெற்றிலை நிச்சயம் இடம் பெற்றிருக்கும். சுபகாரிய பொருட்களுக்காக மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பொருள்களில் ஒன்றாகவும் உள்ளது.
வெற்றிலையில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. வாய்ப்புண், பற்கூச்சம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் பிரச்சனை உள்ளவர்கள் வெற்றிலையை மென்று சாப்பிடலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளால் இப்பிரச்சனைகளுக்கத் தீர்வாக அமைகிறது. மேலும் சைவ உணவோ? அசைவ உணவோ? எது அதிகமாக சாப்பிட்டாலும் சிறிதளவு வெற்றிலையை மென்று சாப்பிட்டால் போதும். இது செரிமான அமைப்பை சீராக்குவதோடு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்வாவ அமைகிறது. மேலும் வெற்றிலையில் உள்ள ஆரோக்கிய பண்புகள் பல் வலி, ஈறு வீக்கம் மற்றும் வாயில் ஏற்படக்கூடிய தொற்று போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
சர்க்கரை நோய்களுக்குத் தீர்வு:
இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது சர்க்கரை நோய். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, டயட்டில் இருப்பது முதல் இதற்காக மருந்து மாத்திரைகள், இன்சுலின் போன்றவற்றை எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிலையை உட்கொள்ளலாம். ஆம் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இன்சுலின் அதிகரிப்பதைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
மேலும் அதிக உடல் பருமன் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்புவோர் வெற்றிலையை மென்று சாப்பிடவும். நிச்சயம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இதோடு உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்கும் போது இதய சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
வெற்றிலையில் உள்ள ரெசிபிகள்:
மேலும் படிக்க:மாதம் ஐந்து முறை வாழைத்தண்டு சாறு குடியுங்கள்- எக்கச்சக்க நன்மைகளை நீங்களே பார்ப்பீர்கள்!
வெற்றிலையை அப்படியே சாப்பிடுவது சிலருக்குப் பிடிக்காது. எனவே வெற்றிலையைக் கொண்டு சில ரெசிபிகளைச் செய்து சாப்பிடலாம். எப்படி கொத்தமல்லி, தூதுவளையை அரைத்து ரசம் வைக்கிறோமோ? இதே போன்று வெற்றிலையை வைத்து ரசம் செய்து சாப்பிடலாம்.
மேலும் மல்லி சாதம், லெமன் சாதம் போன்ற ரெசிபிகள் செய்வது போன்று, வெற்றிலையை நன்கு வதக்கி வெற்றிலை சாதமாக செய்து சாப்பிடலாம். மேலும் வெற்றிலை வடை, வெற்றிலை பக்கோடா போன்ற ரெசிபிகளையும் செய்யலாம். நிச்சயம் சுவையோடு உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation