இன்றைக்கு மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பல நோய்களை விலைக்கொடுத்து வாங்குகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? உணவு பழக்க வழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் 25 வயதிற்கு முன்பாக பலர் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள கூறுகின்றனர். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு 60 சதவீதம் வரை யுடிஐ எனப்படும் சிறுநீர் பாதைத் தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணங்கள்? அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
சிறுநீர் பாதைத் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
- பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவிகள் முதல் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் வரை சரியான நேரத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை.
- தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். இல்லையென்றால் சூடு பிடித்தல், வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.
- அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படக்கூடும்.
- சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்துவதாலும் பெண்கள் அதிகளவில் சிறுநீர் பாதைத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
- உடல் அமைப்பின் படி பெண்களுக்கு சிறுநீர் குழாய் மிகவும் குறுகியதாக இருப்பதால் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகளில் 18 சதவீத பேருக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது.
மேலும் படிக்க :தொளதொள தொப்பை இருந்தால் இந்த உடல்நல பிரச்சனைகள் உங்களுக்கு வரலாம்
சிறுநீர் பாதைத் தொற்றின் அறிகுறிகள்:
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலோடு வலி ஏற்படுகிறதா? அலட்சியம் காட்டாதீர்கள். யுடிஐ எனப்படும் சிறுநீர் பாதைத் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளாகும்.
- சிறுநீர் கழிக்கும் போது அடிக்கடி ரத்தம் வெளியேறுவதும் இந்நோயின் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
- பெண்களுக்கு இடுப்பு வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டாலும் சிறுநீர் பாதைத் தொற்று உள்ளதா? என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
- உடலில் பாக்டீரியா தொற்றினாலும் சிறுநீர் போகும் போது வலி ஏற்படக்கூடும்.
சிறுநீர் பாதைத் தொற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள்:
யுடிஐ எனப்படும் சிறுநீர் பாதை தொற்றிலிருந்து தப்பிப்பதற்கு எப்போதும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். பாதிப்பு இருப்பதை உணரும் பட்சத்தில் தினமும் 6 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். எந்தளவிற்கு தண்ணீர் அதிகளவிற்கு குடிக்கிறீர்களோ? சிறுநீர் வழியாக தொற்று வெளியேறக்கூடும்.
மேலும் படிக்க :பயமுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பின் அறிகுறி, சிகிச்சை குறித்து மருத்துவரின் பிரத்யேக தகவல்
- பெண்கள் எப்போதுமே உள்ளுறுப்புகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மற்றும் உடலுறவின் போது தூய்மையைக் கவனித்துக் கொள்ளவில்லையென்றால் யுடிஐ பாதிப்பின் அபாயம் பன்மடங்காக அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பிறப்பறுப்பு பகுதிகளை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவிக் கொள்ளவும்.
- அதிக வியர்வை மற்றும் இறுக்கமாக அணியும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க :நச்சு நீக்கும் இந்த பானத்தைக் குடித்து வந்தால் இரண்டே வாரத்தில் 2 கிலோ எடையை குறைக்கலாம்
அதிக வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறினால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation