herzindagi
infertility

“Superfoods” : கருவுறுதலை எளிதாக்கிடும் சூப்பர் ஃபுட்ஸ்

தற்போதைய இளைய தலைமுறை சந்திக்கும் பிரச்சனைகளில் கருவுறுதலும் ஒன்று. இந்த பிரச்சினைக்கு சூப்பர் ஃபுட்ஸ் உதவுகின்றன
Editorial
Updated:- 2023-12-23, 19:12 IST

கருவுறுதலை ஆதரிப்பதில் சூப்பர் ஃபுட்ஸ் பெரும் பங்கு வகிக்கின்றன. இது என்ன புலப்படாத ஒன்றாக இருக்கிறது என நினைக்க வேண்டாம். தாம்பத்திய வாழ்க்கையில் இந்த சூப்பர் ஃபுட்ஸூம் இடம்பெறுகின்றன. இந்த உணவுகளில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருக்கின்றன. கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு சூப்பர் ஃபுட்ஸ் உதவுகின்றன. கீழே பட்டியலிடப்பட்டி இருக்கும் அனைத்து சூப்பர் ஃபுட்ஸ்களும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டவை.

கருவுறுதலை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்ஸ்

ஒமேகா 3 

உடலில் ஹார்மோன்கள் கொழுப்புகளால் உருவானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிட வேண்டும். இதற்கு பாதாம், வால்நட், சால்மன் மீன், கானாங்கெளுத்தி, மத்தி, ஆளிவிதை, சியா விதை போன்றவற்றை தினசரி உணவில் சேர்க்கவும். 

இலை காய்கறிகள்

இவை உடலை சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகின்றன. கல்லீரல் செயல்பாடு, பித்தப்பையின் நலன், எலும்பு ஆரோக்கியம் ஆகியவற்றிக்கு இலை காய்கறிகளைச் சாப்பிடுவது மிகவும் அவசியம். கீரை, வெந்தய இலைகள், பிரஸ்ஸல்ஸ், முள்ளங்கி இலைகள் மற்றும் பீட்ரூட் இலைகள் உடலுக்கு நல்லது.

கடல் காய்கறிகள்

இவை உடலுக்குத் தேவையான ஐயோடினை வழங்குகின்றன. கடல் காய்கறிகள் தைராய்டு செயல்பாட்டிற்கு உதவும். மேலும் கருச்சிதைவுகளையும் தடுக்கும். இதற்கு உணவில் கடற்பாசி, கொம்பு மற்றும் வக்கமே போன்ற கடல் காய்கறிகளை சாப்பிட வேண்டும்

seaweed

மேலும் படிங்க Get Pregnant : கர்ப்பம் தரிக்க என்ன செய்வது ? மகளிர் கவனத்திற்கு !

வைட்டமின் D3

ஆய்வுகளின்படி நல்லுணர்வு, பிறக்கும் குழந்தையின் எடை ஆரோக்கியம், நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவற்றுக்கு வைட்டமின் D3 அவசியமாகும். வைட்டமின் D3 இயற்கையாகப் பெற்றிட சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். காட் லிவர் எண்ணெய் பயன்படுத்துவதும் வைட்டமின் D3-ன் சிறந்த ஆதாரமாகும்.

புரோபயாடிக்ஸ்

sauerkraut

புளித்த காய்கறிகள், வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய், கேரட் கஞ்சி, சார்க்ராட் மற்றும் கொரியன் கிம்சி ஆகியவை நலநுண்ணுயிரி எனும் புரோபயாடிக்ஸ் ஆகும். கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான குழந்தை பிறப்பு மேம்பாட்டையும் சேர்த்து செரிமானம் மற்றும் குடல் நலன் போன்றவற்றுக்கும் புரோபயாடிக்ஸ் உதவுகிறது.

சூப்பர் ஃபுட்ஸ் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதே நேரம் கருவுறுதலுக்கு எதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் சிந்தியுங்கள்.

மது அருந்தக் கூடாது

அதிகப்படியாக மது அருந்தினால் அது ஈஸ்ட்ரோஜனின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். அதே சமயம் கல்லீரல் பாதிப்பு, தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும்.

மேலும் படிங்க Diabetes in Women : பெண்களே உஷார்! சரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்

காஃபின்

அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் உடலில் இருந்து கனிமங்கள் வெளியேறும், குடல் புறணி மெலிதாகும்.

சர்க்கரை

அதிகப்படியாக சர்க்கரை உட்கொண்டாலும் கருவுறுதல் பாதிக்கப்படும். கல்லீரல் நோய் மற்றும் இதர விளைவுகளுக்கு சர்க்கரை வித்திடும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com