கூந்தல் வளர்ச்சிக்கு ஆலிவ் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும். இது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் விரைவான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆலிவ் எண்ணெய்யை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான எளிய வழிகளை இதில் காணலாம்.
மேலும் படிக்க: சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நாவல் பழம்; உங்கள் பராமரிப்பு முறையில் இப்படி பயன்படுத்தவும்
ஆலிவ் எண்ணெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அன்டிஆக்சிடென்ட்ஸ் முடியின் வேர்களில் ஊட்டச்சத்தை அளித்து, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதனால் முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியான முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, அதை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த மசாஜ், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்துகிறது. இது தவிர, தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தடவி, ஷவர் கேப் கொண்டு மூடி, மறுநாள் காலையில் குளித்து விடலாம். இது ஆழமான ஊட்டச்சத்தை அளித்து, வறண்ட கூந்தலை சரிசெய்கிறது.
ஆலிவ் எண்ணெய்யுடன் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த புரதச்சத்து நிறைந்த ஹேர்பேக்கை உங்கள் கூந்தலில் தடவவும். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். முட்டையில் உள்ள புரதம் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வீட்டிலேயே துளசி மற்றும் வேப்பிலை ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்துவது எப்படி?
மேலும், ஆலிவ் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யை சம அளவில் கலந்து, அதை லேசாக சூடாக்கி உச்சந்தலையில் தடவலாம். இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து நன்கு கிடைக்கும். இந்த சூடான எண்ணெய் முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருவி சென்று, முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
ஆலிவ் எண்ணெய்யுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கலந்து உச்சந்தலையில் தடவலாம். இந்தக் கலவை உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை போக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதேபோல், ஷாம்பூ பயன்படுத்துவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆலிவ் எண்ணெய்யை உச்சந்தலையில் நன்கு தேய்க்கவும். இது முடி உதிர்வை குறைக்கும். இது ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்யுடன் தேன் கலந்து கூந்தலில் தடவலாம். தேன் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது. இந்தக் கலவை கூந்தல் வறண்டு போவதை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், ஈரமான கூந்தலின் நுனிகளில் ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய்யை தடவவும். இது முடியை மிருதுவாக மாற்றும்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com