தூக்கம் வரலேன்று புலம்பினாலே, வீட்டில் உள்ள பெரியவர்கள் அவ்வளவு திட்டுவார்கள். முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் போதும், தூக்கம் வரவில்லையென்றாலும் புத்தகம் படிப்பார்கள். இல்லையென்றால் அருகில் உள்ளவர்கள் பேசுவார்கள். இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. மொபைல் போன் மற்றும் கணினி வாயிலாக சோசியல் மீடியாக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். தூக்கம் வந்தால் கூட ஆர்வத்துடன் பார்ப்பது இயல்பாகிவிட்டது. இப்படி இருக்கையில் எப்படி தூக்கம் வரும்? இதனால் தான் வீட்டில் உள்ள இளசுகள் அதிகம் திட்டு வாங்குகிறார்கள். இதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்தாலே நிச்சயம் இரவு நேரத்தில் நல்ல தூக்கம் வரக்கூடும். இதோடு மட்டுமின்றி தூக்கத்தை மேம்படுத்துவதற்கு கீழ்வரக்கூடிய சில டிப்ஸ்களைக் கொஞ்சம் பாலோ பண்ணுங்க.
மேலும் படிக்க: தினமும் மது அருந்தினால் உடலின் எந்தப் பகுதியில் என்ன பாதிப்பு ஏற்படும்? - எச்சரிக்கையாக இருங்கள்!
நம்மில் சிலர் ஏதேனும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது அளவுக்கு மீறி சாப்பிடுவோம். சில நேரங்களில் மீன், மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிடுவோம். அதிகளவு சாப்பிடும் போது இரவு நேரங்களில் எளிதில் ஜீரணமாகாது. எனவே இது போன்ற உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், வழக்கமாக எப்போது தூங்குவீர்களோ? அதற்கு மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் முன்பே சாப்பிட வேண்டும். அப்போது தான் தூக்கம் ஏப்பம், அஜீரண கோளாறு ஏற்படாது. இதனால் நல்ல தூக்கத்தைப் பெறுவீர்கள். மேலும் தூங்குவதற்கு முன்னதாக கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிடுவது நல்லது.
தூக்கம் வருவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் தூங்குவதற்கு முன்னதாக குளித்தல். உடல் புழுக்கமாக இருந்தாலும் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும். எனவே தூங்குவதற்கு 15-20 நிமிடங்கள் அல்லது அரை மணி நேரத்திற்கு முன்னதாக குளிக்க வேண்டும். உடலில் அசௌகரியமான சூழல் நீங்கினாலே நிச்சயம் தூக்கம் அதிகளவில் வரக்கூடும்.
நாம் எப்போதும் தூங்கினாலும் வடக்கு நோக்கி தூங்காதே மாற்று திசையில் தூங்கு என நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். முட்டாள் தானம், மூட நம்பிக்கை என பல விஷயங்களை அந்த நேரத்தில் எதிர்மறையாக பேசினாலும், அறிவியல் ரீதியாக வடக்கு திசையில் தசை வைத்து தூங்குவதால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். தலையை வடக்கு பக்கமாக வைத்து தூங்கும் போது கிடைமட்டமாக இருப்பது, உடலில் உள்ள இரத்தம் மெதுவாக மூளை நோக்கி ஈர்க்கப்படும். இப்படி அதிகப்படியாக இரத்த ஓட்டம் மூளைக்கு சென்றால் தூங்குவதில் அதிக சிரமம் ஏற்படும்.
மேலும் படிக்க: உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் கொழுப்பு கல்லீரல் பாதிப்பைக் குறிக்கும்
இரவில் பசி எடுக்காத அளவிற்கு நல்ல சாப்பிட வேண்டும், அலராம் மற்றும் மொபைல் போன்றவற்றை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 7-8 மணி நேரம் தூங்குவது தான் உடலுக்கு ஆரோக்கியம் என்பதால் இந்த விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
Image Source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com