herzindagi
image

நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் பெற வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த எளிய விஷயங்களை செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில் தூக்குவதற்கு நிறைய பிரச்சனைகள் உள்ளது. நல்ல தூக்கத்தை மேம்படுத்த வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில வாஸ்து தீர்வுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
Editorial
Updated:- 2025-07-11, 21:26 IST

இரவில் சரியாக தூங்க முடியவில்லை என்பதால், படுக்கையில் பக்கங்களை மாற்றிக் கொண்டே நாள்தோறும் இருக்குகிறீர்களா? இரவு முழுவதும் தூக்கமும் பல முறை தடைபடுவது பலருக்கு இருக்கிறது. நம்மில் பலருக்கு சரியான தூக்கம் வராத பிரச்சனை உள்ளது. இரவில் நல்ல மற்றும் சிறந்த தூக்கத்தைப் பெற நாம் பல நடவடிக்கைகளை எடுக்கிறோம், ஆனால் எல்லாம் தோல்வியடைவது போல் தெரிகிறது.

நல்ல தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் வேலை அழுத்தம் காரணமாக நல்ல தூக்கம் வராது, சில சமயங்களில் உடல்நலக்குறைவு காரணமாக தூக்கத்தை இழக்க நேரிடும். சில நேரங்களில் நீங்கள் 1-2 நாட்கள் இரவில் தாமதமாக தூங்கினால், அது வழக்கமான செயல்களை பாதிக்க செய்யும். ஆனால் மோசமான வாஸ்து காரணமாக உங்கள் தூக்கம் தொந்தரவு செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? தூங்கும் திசையைப் பொறுத்தவரை, பஞ்ச பூதம் காற்று, சூரியன் மற்றும் பிற கூறுகளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறது என்று நம்பப்படுகிறது. நல்ல தூக்கத்தை வழங்குவதற்கான திசைகளின் முக்கியத்துவத்தை வாஸ்து சாஸ்திரம் எடுத்துக்காட்டுகிறது. இது உங்கள் படுக்கையறை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் பொறுத்தது.

படுக்கையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

 

தூக்கம் சரியாக இல்லாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் படுக்கை குழப்பமாக இருந்தால், படுக்கை விரிப்பு சரியாக வைக்கப்படவில்லை அல்லது படுக்கையில் பொருட்கள் சிதறிக்கிடந்தால், சரியாக தூங்குவதில்லை. எனவே, எப்போதும் உங்கள் படுக்கையை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் படுக்கை விரிப்பு மற்றும் போர்வை படுக்கையில் சரியாக அமைக்கப்பட வேண்டும். சுத்தமான படுக்கை நீங்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது. தூங்குவதற்கு முன் மென்மையான இசையைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைத்து உடலை உற்சாகப்படுத்துகிறது, இதனால் நன்றாக தூங்க உதவும்.

bed clean

 

தலையணை உறைகளை மாற்ற வேண்டும்

 

தலையணையில் எண்ணெய், அழுக்கு மற்றும் வியர்வை படிகிறது. இதனால் அவற்றில் பல பாக்டீரியாக்கள் வளர்கின்றன, இது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதுவே நீங்கள் நன்றாக தூங்க முடியாமல் போவதற்கான காரணம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீங்கள் தினமும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும். அதே போல் தலையணை உறைகளும் எண்ணங்களை நிதானப்படுத்தவும் நேர்மறையான சூழலை உருவாக்கவும் உதவும்.

 

மேலும் படிக்க: வீட்டின் தெற்கு திசையில் இந்த செடிகள் வைத்திருந்தால் பணப் பற்றாக்குறை ஏற்படாது

குளியலறை கதவை மூடி வைக்கவும்

 

குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவை உடல் கழிவுகளை அகற்றும் இடங்களாகும், எனவே நீங்கள் தூங்குவதற்கு முன் கதவை மூட வேண்டும். வாஸ்து ரீதியாக கதவு தென்மேற்கு திசையில் இருக்கக்கூடாது. உங்கள் குளியலறை படுக்கையறையுடன் இணைக்கப்பட்டு இருந்தால், உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி பரவாமல் இருக்க குளியலறை கதவை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.

bed clean 1

 

வெளிர் நிறத்தில் படுக்கையறை இருக்க வேண்டும்

 

படுக்கையறை சுவர்களின் நிறத்தைப் பொறுத்தவரை, வெளிர் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் வெளிர் பச்சை சுவர்கள் போன்ற கண்களுக்கு இதமான வெளிர் வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். சுவர்களுக்கான மிகவும் பிரபலமான படுக்கையறை வண்ணங்களில் பழுப்பு போன்ற மண் வண்ணங்கள் மற்றும் ஒத்த வண்ணங்கள் அடங்கும். படுக்கையறை வாஸ்துவின் படி, சுவர்களில் கருப்பு, சாம்பல் அல்லது பழுப்பு நிறங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 

மேலும் படிக்க: தெய்வ மகிமை கொண்ட பவழமல்லி செடியை வீட்டில் இந்த திசையில் வைத்தால் செழிப்பை தரும்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com