
உறங்க மட்டுமே தெரிந்தவர்கள் பலர். இதனால் அவர்களால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. நீங்கள் நாள் முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா?
போதுமான தூக்கம் என்பது ஆரோக்கியத்திற்கு அவசியம் தான். இல்லையெனில், பல உடல்நலப் பிரச்சனைகள் வரும். நீங்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் பழக்கங்களை மாற்ற வேண்டும்.

சிலர் காலையில் எழுந்தவுடனே தண்ணீர் குடிக்கத் தொடங்குவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்ததுண்டா? இவ்வாறு செய்வதன் மூலம் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும். நாள் முழுவதும் தூங்குபவர்களுக்கு தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோம்பலுக்குக் காரணம் நீர்ச்சத்து குறைபாடுதான் என்பது பெரும்பாலான சமயங்களில் உண்மையாகிறது. எனவே தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதால் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

நீங்கள் காலை உணவை சாப்பிடாதவரா? அல்லது அவசரத்தில் குறைவாக சாப்பிடுபவரா? இதை நீங்கள் செய்யவே கூடாது. இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இவ்வாறு செய்வதால், நாள் முழுவதும் தூக்கம் வரும். சிறிது சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள், பிறகு உங்கள் காலை உணவை நிதானமாக நிறைய சாப்பிடுங்கள். காலை உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கும். இதனால் தூக்கம் வராது.

போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானது. போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு, நாள் முழுவதும் தூக்கம் வருவதோடு, எரிச்சல், தலைவலி மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சனையும் வரக்கூடும். எனவே உங்கள் தூக்க சுழற்சியில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். தினமும் சீக்கிரம் தூங்கச் செல்வது நல்லது. ஒரு நேர அட்டவணையை உருவாக்கி, அதை பின்பற்ற வேண்டும். இப்படி செய்தால் பகல் முழுவதும் தூக்கம் வராது.

உடற்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. அதனால் தான் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், உடற்பயிற்சி செய்த பிறகு, தூக்கமும் குறைவாக வரும். குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜாகிங் செல்வதன் மூலமும் தூக்க பிரச்சனையை குறைக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com