ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடாதே தொண்டையில் சதை வளரும் என குழந்தைகளை மிரட்டும் பெற்றோர்களில் நிச்சயம் நீங்களும் ஒருவாக இருக்கலாம். குளிர்ச்சியான பானங்கள் சாப்பிடுவது முதல் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று பாதிப்பால் தொண்டையின் பின்புறத்தில் உள்ள திசுக்களின் கட்டிகள் ஏற்படுவதை டான்சில் அதாவது தொண்டையில் சதை வளர்தல் பாதிப்பு என்கிறோம்.
டான்சில் பாதிப்பின் அறிகுறிகள்:
- தொண்டையின் பின்புறத்தில் இருக்கும் மென்மையான திசுக்களான டான்சில்களால் ஏற்படும் நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் போது பல ஆரம்ப கால அறிகுறிகளை நாம் அனுபவிக்க நேரிடும்.குறிப்பாக தொண்டையில் புண் ஏற்படக்கூடும்.
- தொண்டை புண் பாதிப்பு அதிகமாக போது காய்ச்சல் மற்றும் அடிநாடித் தடுப்பு ஏற்படும்.
- தண்ணீர் மற்றும் எந்த உணவுப் பொருட்களையும் சாப்பிடுவதற்குக் கூட சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆம் டான்சில் பாதிப்பு ஏற்படும் போது தொண்டையில் வரக்கூடிய புண்ணால் விழுங்குவதற்குக் கூட சிரமத்தை சந்திக்க நேரிடும்.
- தொண்டையில் சதை வளர்ச்சி பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சளி பிடித்தல், ஐலதோஷம் மற்றும் தொண்டை புண் பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
டான்சில் பாதிப்பைக் குணப்படுத்த எளிய வீட்டு வைத்தியம்:
தொண்டையில் ஏற்படக்கூடிய சதை வளர்ச்சியை சரிசெய்வதற்கு பூண்டு சிறந்த தேர்வாக அமையும். இதில் உள்ள ஆண்டி எதிர்ப்பு பண்புகள் தொண்டையில் ஏற்படும் புண்களை சரிசெய்ய உதவுகிறது.
மேலும் படிக்க :இதெல்லாம் சிறுநீர் பாதைத் தொற்றின் அறிகுறிகள்; பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தும் மருத்துவர்கள்
பயன்படுத்தும் முறை:
டான்சிலைக் குணப்படுத்தும் மருத்து தயார் செய்வதற்கு முதலில் 2 அல்லது 3 பூண்டு பற்களை நீராவியில் வேக வைக்கவும்.பின்னர் பிழியும் போது கொஞ்சமாக சாறு கிடைக்கும்.
இந்த பூண்டு சாற்றுடன் சிறிதளவு தேன் கலந்துக் கொள்ளவும். அப்போது தான் பூண்டின் காரம் இருக்காது.இந்த சாறை தொண்டையில் சதை உள்ள இடங்களில் அப்ளை செய்யவும். கைகளால் அப்ளை செய்ய முடியாது என்பதால் ஒரு ஊசி கொண்டு பாதிப்பு இடத்தில் அப்ளை செய்து வரும் போது டான்சில் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடு்ம்.
மேலும் படிக்க :Morning Running Benefits: அதிகாலையில் ஓடுவதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய 5 நன்மைகள்
- பாக்டீரிய தொற்றுகளால் ஏற்படக்கூடிய டான்சில் பாதிப்பைக் குணப்படுத்த வேண்டும் என்றால், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
- தொண்டையில் ஏற்படும் வலியை சரி செய்வதற்கு இஞ்சி டீ யை பருகலாம். இதில் உள்ள ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சதை வளர்ச்சியைக் குறைக்க உதவக்கூடும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation