
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவாக பால் கருதப்படுகிறது. எனினும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பால் குடித்தால் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் வயிற்றில் பால் குடித்தால் அது சிலருக்கு ஜீரண கோளாறு பிரச்னைகளை உண்டாக்கும். பாலில் உள்ள லாக்டோஸை சிலரால் எளிதில் ஜீரணிக்க முடியாது. வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிறு உப்புசம், வாயு தொல்லை, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த பதிவில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பகிரப்பட்டுள்ளது. இனி வெறும் வயிற்றில் பால் குடிக்கும் முன்பாக சற்று யோசிக்கவும்.

மாட்டு பால் அமிலத்தன்மை கொண்டதாகும். இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது குடலில் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் மற்றும் செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்
பாலில் உள்ள கால்சியம், ஜிங்க் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை உடலுக்கு தேவையான மினரல் உறிஞ்சப்படுவதை தடுக்கும். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
பால் கலோரி நிறைந்த உணவு என்பதால் அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது எடை அதிகரிக்க கூடும். பாலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் உங்கள் உடல் செயல்பாடுகளுக்கு பயனுள்ள வகையில் உபயோகம் இல்லாமல் போகலாம். இதனால் உடலில் தேவையின்றி கலோரி உட்கொள்ளல் அதிகரிக்கும்.
மாட்டு பாலில் உள்ள புரத மற்றும் இதர விஷயங்கள் படை நோய், அரிப்பு மற்றும் சில சரும பாதிப்புகளை ஊக்குவிக்கும்.
வெறும் வயிற்றில் மாட்டு பால் குடித்தால் அதிலுள்ள ஹார்மோன்கள் உடலில் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
உடல்நிலை சரியில்லாத போது சூடாக டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறோம். உண்மை என்னவென்றால் பால் மூச்சுக்குழாயில் சளி உற்பத்திக்கு வழிவகுக்கும். ஒரு சில சமயங்களில் ஆஸ்துமா மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை உண்டாக்கும்.
மேலும் படிங்க உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சிறுநீர்! எந்த நிறத்தில் இருக்க வேண்டும் தெரியுமா ?
ஊட்டத்து நிறைந்த மாட்டு பாலை உடல் நலனுக்காக குடிப்பது அவசியம் தான். எனினும் காலையில் வெறும் வயிற்றில் அதை குடிப்பது நல்லதல்ல. மேற்கண்ட சிக்கலை புரிந்துகொண்டு முடிந்தவரை காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பதை தவிர்க்கவும். மேலும் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற காலையில் எதை சாப்பிட வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com